ஸ்பெஷல் கொத்துகறி குருமா

தேதி: May 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கொத்துகறி - அரைகிலோ
தக்காளி - ஒன்று
வினிகர் - இரண்டுகரண்டி
சப்ஜாஇலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - நான்கு கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்கவும்:
பூண்டு - பத்து பல்
மிளகு - 15
காய்ந்த மிளகாய் - 6


 

கறியை வினிகர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
ஒரு நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பின் அதில் தக்காளியை போட்டு வேகவைத்த கறியை போட்டு கிளறவும். அது நன்றாக எண்ணெய் விட்டதும் சப்ஜா இலையை தூவி சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்


இது சாதம் சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

JANABA, SULAIKA NAZEER ASLAM ALYKUM.HOW ARE YOU WHAT IS THE SAPJA ELAI.HOW IS THE CALL THE TAMIL KENY SEND TO ME DETAILS,[VASLAM]

அறுசுவை தேன் சுவை

அஸ்ஸலாமு அலைக்கும் நலமாக இருக்கிறீர்களா ? இப்பொழுதுதான் நான் உங்கள் கேள்வியை பார்த்தேன் Basil Leaves இலையைதான் எங்கள் ஊர் பக்கம் சப்ஜா இலை என்று சொல்லுவார்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அருமை சகோதரி ஜுலைகா
வினிகர் இரன்டு கரன்டிஎன்றால் எந்த கரண்டி தேக்கரண்டியா,மேசைக்கரண்டியா, குழிகரண்டியா.
ஜலீலா

Jaleelakamal

அருமை சகோதரி ஜுலைகா
வினிகர் இரன்டு கரன்டிஎன்றால் எந்த கரண்டி தேக்கரண்டியா,மேசைக்கரண்டியா, குழிகரண்டியா.
ஜலீலா

Jaleelakamal

அருமை சகோதரி ஜலீலாவுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் இதுவரை நான் உங்களுடன் பேசியது இல்லை இதன் மூலம் பேசுவது குறித்து சந்தோஷம் நலமா இருக்கிறீர்களா? இரண்டு மேஜைகரண்டிதான்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!