உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

பருப்பு சாதம்



தேவையானப் பொருட்கள்

  • தக்காளி - 2
  • பெரிய வெங்காயம் - 4
  • பச்சை மிளகாய் - 5
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
  • புதினா - 2 மேசைக்கரண்டி
  • பயத்தம் பருப்பு - ஒன்றரை கப்
  • பிரியாணி அரிசி - 2 கப்
  • தேங்காய் - ஒன்றரை கப்
  • நெய் - ஒரு மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - அரை தேக்கரண்டி
  • சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
  • சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
  • எண்ணெய் - கால் கப்
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புதினா, கறிவேப்பிலை இரண்டையும் ஆய்ந்துக் கொள்ளவும். கொத்தமல்லித் தழையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
step 1
துருவின தேங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பிழிந்து கெட்டியான முதல் பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த தேங்காய் சக்கையில் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து இரண்டாம் தண்ணீர் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
step 2
எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
step 3
பிறகு நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
step 4
வதங்கியதும் நறுக்கின புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்பு அதனுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள், சோம்பு தூள், சீரகத் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
step 5
பிறகு தேங்காய் பால், உப்பு சேர்த்து கலக்கி விட்டு 2 நிமிடம் கழித்து அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி களைந்து குக்கர் பாத்திரத்தில் போடவும்.
step 6
அடுப்பின் தீயை மிதமாக வைத்து 5 நிமிடம் லேசாக கொதிக்க விடவும். இடையில் கிளறிக் கொண்டே இருக்கவும்.
step 7
சுமார் 5 நிமிடம் கழித்து எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் பாத்திரத்தை வைத்து மூடி வைத்து வேகவிடவும்.
step 8
சுமார் 30 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து பாத்திரத்தை எடுக்கவும். சாதத்தின் மீது சிறிது நெய் ஊற்றி கிளறி விடவும்.
step 9
இப்போது ருசியான பருப்பு சாதம் தயார். இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கப்படும் மதிய உணவு இது. இதனுடன் ஆனியன் ரைத்தா அல்லது கோழி குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.
step 10
இந்த சுவையான பருப்பு சாதத்தை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. சல்மாபானு ஹசன் அவர்கள். சிறுவயதில் இருந்தே சமையலில் ஆர்வம் காட்டி வரும் இவர், ஏராளமான இஸ்லாமிய உணவுகளை சுவைபட தயாரிக்கும் திறன் வாய்ந்தவர்.
step 11


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
Dear Salma Banu
மே 17, 2007 - 8:08am - வழங்கியவர் revraj12

Very nice dish and i think its easy to prepare......can u please tell me, whether we have to soak the dhall before using or directly we can add with the rice.....?

thanks
Kind regards
revraj12

nice
அக்டோபர் 18, 2007 - 1:54pm - வழங்கியவர் devi72

very nice
good food thankyou so much

Assalamu Alaikkum
ஜூன் 12, 2008 - 12:11am - வழங்கியவர் Thahsina

Thahsina

No water mesermant.

Thahsina
ஜூன் 12, 2008 - 12:18am - வழங்கியவர் Jaleela Banu

வா அலைக்கும் அஸ்ஸ்லாம்.Thahsina

இது தேங்காய் பாலோடு சேர்த்து ஒன்றுக்கு ஒன்னறை கப் தண்ணீர் ஊற்றனும்.

இந்த ரைஸ் ரொம்ப அருமையா இருக்கும், இதற்கு வெரும் புதினா துவையல் மட்டும் வைத்து சாப்பிட்டால் கூட சுவை அபாரமாக இருக்கும்.
மீன் குழம்பு சூபர் காம்பினேஷன்.
கறி கூட்டும் நல்ல இருக்கும், குழந்தைகலுக்கு ரொம்ப வே பிடிக்கும்.

ஜலீலா

பருப்பு சாதம்
அக்டோபர் 6, 2008 - 6:47pm - வழங்கியவர் vatsaladevi

உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது
படங்களுடன் மிக அழகாக தந்தமைக்கு பராட்டுக்களும் நன்றியும்