சிக்கன் நூடுல்ஸ்

தேதி: May 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நூடுல்ஸ் - 2 பாக்கெட்
நூடுல்ஸ் மசாலா - 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 4
காரட் - 2
பட்டாணி - கால் கப்
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
முட்டை - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித் தழை - 2 கொத்து
சிக்கன் - 2 துண்டு
கலர் பவுடர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி + ஒரு சிட்டிகை


 

முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி பட்டாணியை போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் கலர் பவுடர், அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.
வாணலியில் ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மற்றொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு போட்டு 2 நிமிடம் கிளறி விட்டு இறக்கி விடவும்.
அதே வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு காரட், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் தக்காளி போட்டு 3 நிமிடம் வதக்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது, பட்டாணி, கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து பொரித்து வைத்திருக்கும் முட்டையையும், சிக்கனையும் போட்டு கிளறி விடவும்.
இதற்கு இடையில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்ததும் நூடுல்ஸ் போட்டு 2 நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த நூடுல்ஸை சிக்கன் முட்டை மசாலாவுடன் சேர்த்து மேலே நூடுல்ஸ் மசாலாவை போட்டு 3 நிமிடம் கிளறி விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் தயார். இதற்கு தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிடலாம். இதை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. கமர்நிஷா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கமர் அக்கா உங்களோட சிக்கன் நூட்லஸ் தான் நேத்து நைட் டின்னெர் கு பண்ணேன் சூபர இருந்துச்சு மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் நேற்று இரவு உங்க சிக்கன் நூடுல்ஸ் தான் பண்ணினேன்....புது மாதிரி சுவையாக இருந்தது..நன்றி...

சிக்கன் நூடுல்ஸ் பண்ணினேன்.சுவையாக இருந்தது நன்றி...

அஸ்ஸலாமு அலைக்கும் கமர்நீஸா அக்கா, உங்கள் முறையை அப்படியே பின்பற்றி கடந்த 24 அன்று செய்தேன் வீட்டில் ஒரே பராட்டு மழை. நான் இண்டோ மீகொரிங் தான் USE பண்ணுவேன் மேகி மசாலா அவித்த மேகியில் கலந்து வைத்து கொண்டு அதன்பின் மேகியை வதக்கி வைத்துள்ள மசாலாவில் சேர்த்தேன் சுவை அருமையாக இருந்தது. நன்றி.