கத்திரிக்காய் துவையல்

தேதி: May 15, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நாட்டு கத்திரிக்காய் - 200 கிராம்
தேங்காய் - பாதி மூடி
புளி - ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
நாட்டு வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு


 

முதலில் கத்திரிக்காயை கழுவி பொடிதாக நறுக்கவும், வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு வறுத்து எடுக்கவும்.
பின்பு அதே எண்ணெயில் நறுக்கி வைத்த கத்திரிக்காயை அதில் போட்டு நன்கு வதக்கவும், லேசான தீயில் வதக்கவும். கத்திரிக்காய் சுருண்டு வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.
பின்பு மிக்ஸியில் காய்ந்த மிளகாயையும் புளியையும் ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
பிறகு அதில் துருவிய தேங்காயை அதில் இட்டு மேலும் ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு அரைக்கவும்.
பின்பு வதக்கிய கத்திரிக்காயை அதில் போட்டு அரைக்கவும், பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
இதுவே கத்திரிக்காய் துவையல். இது இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பரான துவையல்.இட்லி,தோசைக்கு பொருத்தமான சைட் டிஷ்.மிக்க நன்றி ரசியாக்கா!!

நிஜம் தான் மேனகா!இது இட்லி தோசைக்கு ரொம்ப நல்லா இருக்கும்!எனது தந்தைக்கு மிகவும் பிடிக்கும்!ரொம்ப நன்றிமா பின்னூட்டதிர்க்கு!