க்ரீன் சிக்கன் மசாலா

தேதி: May 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - கால் கிலோ
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பச்சை மிளகாய் - 4
மிளகு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் - ஒன்று
எண்ணெய் - அரை கப்
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். எலும்பில்லாமல் சிக்கனை துண்டுகளாக நறுக்கி, கழுவி சுத்தம் செய்யவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினா இரண்டையும் ஆய்ந்து தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுது போட்டு 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
பிறகு 2 நிமிடம் கழித்து சிக்கன் சற்று நிறம் மாறியதும் அரைத்த கொத்தமல்லி, புதினா விழுதை போடவும்.
சிக்கனுடன் விழுது நன்கு கலந்ததும் மேலும் 2 நிமிடம் கிளறி உப்பு போட்டு மீண்டும் நன்கு 2 நிமிடம் கிளறவும்.
பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும்.
சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் சுண்டியதும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
அதிருசியான கிரீன் சிக்கன் மசாலா ரெடி. அறுசுவை நேயர்களுக்காக இதை செய்து காட்டியவர் திருமதி. சித்தி ஃபாத்திமா அவர்கள். இவர் 25 ஆண்டுகளுக்கு மேல் சமையல் துறையில் அனுபவம் மிக்கவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

good and gives different taste.thanks for the receipe.

thyagu

அருமை சகோதரி சித்தி பாத்திமா
இந்த கிரீன் சிக்கன் மிகவும் அருமை என் பையன் ம்றுபடியும் எப்போது செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டேஇருப்பான்
ஜலீலா

Jaleelakamal