How to keep the refrigerator in a working condition without using it for a year or more?

ஹலோ இந்திரா எப்படி இருக்கீங்க? ஃபிரிஜ்ஜை பற்றிய தங்களின் கேள்விக்கு எனக்கு தெரிந்ததைக் கூறுகின்றேன். பொதுவாக மின்சாரத்தில் இயங்கும் எந்த பொருளையும் கண்கானிப்பு இல்லாதபட்சத்தில் அதன் இனைப்பை துண்டித்து விடுவது தான் நல்லது. ஆனால் குளிசாதனப் பெட்டியைப் பொருத்தவரையில் ஒரு சில நாட்களுக்கு வேண்டுமானால் அதிலுள்ள பொருட்களின் நிமித்தம் இனைப்பை துண்டிக்காமல் விட்டு செல்லலாம். ஆனால் நீங்கள் கேட்டிருப்பதுப் போல் ஒரு வருடத்திற்க்கு மேல் என்றிருந்தால் கட்டாயம் அதன் இணைப்பை துண்டித்துவிடுவது தான் நல்லது. அதோடுமட்டுமல்லாமல் ஃபிரிஜ்ஜை காலி செய்தப் பிறகு நன்கு துடைத்து ஈரப்பதம் சிறிது கூட இல்லாமல் நன்கு துடைத்து ஒரு நாள் முழுவதும் திறந்து வைத்திருந்து நன்கு காய்ந்தபிறகு, முக்கியமாக அதன் ஓரங்கள் நன்கு உலர்ந்தவுடன் மூடி வைத்து விடலாம்.அல்லது திறந்தே கூட வைத்துவிடலாம்.

மீண்டும் ஆன் செய்யும் பொழுது உடனே பொருட்களை வைக்காமல் ஃபிரிஜ் நன்கு செயல்படுகின்றதா என்று உறுதி செய்தப் பிறகு பொருட்களை வைப்பது நல்லது. காரணம் சில நேரங்களில் ஆன் செய்யும் பொழுது திடீரென ஏற்ப்படும் மாற்றத்தாலும்,மேலும் அதிலுள்ள கம்ப்ரஸ்ஸர், தெர்மாஸ்டர்ட் போன்ற பொருட்களாலும் கூட மாற்றம் ஏற்ப்பட்டு செயலாற்றாமல் இருக்க நேரிடும்.ஆகவே இதையெல்லாம் கவனித்தப் பிறகு பொருட்களை பாதுகாப்பாக வைக்கலாம். சாதாரணமாக ஓரளவிற்க்கு புதிய ஃபிரிஜ்ஜால் இவ்வாறு ஆஃப் செய்து வைத்திருந்து மீண்டும் ஆன் செய்யும் போது பிரச்சனைகள் எதுவும் ஏற்ப்படாது என்று தான் நினைக்கின்றேன்.நன்றி.

Dear Manohari
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி
இந்திரா

Save the Energy for the future generation

மேலும் சில பதிவுகள்