நம்முடைய வீட்டில் கரண்டு பில்லை எப்படி கம்மி பன்னுவது?

ஹாய் மனோகிரி மேடம் ,நம்முடைய வீட்டில் கரண்டு பில்லை எப்படி கம்மி பன்னுவது? எங்கள் வீட்டில் கரண்ட் பில்லை பார்த்தால் எனக்கு B.P. ஏறுகிறது.இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.PLEASE.

ஹலோ டியர் ரம்பா எப்படி இருக்கீங்க? மிகவும் நல்ல பயனுள்ள கேள்வியை கேட்டுள்ளதற்கு மிக்க நன்றி. இந்த விசயத்தில் உலகத்தில் வாழும் அனைவருமே கவனம் செலுத்துவது நல்லது என்று தான் கூறுவேன். ஏனென்றால் எலோருக்குமே தெரிந்தது தான், மின்சாரம் இல்லையென்றால் உலமே ஸ்தம்பித்து நின்று விடும், அந்த அளவிற்க்கு அது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டிருந்தாலும் அதை உபயோகிக்கும் முறையினால் வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பது தான் உண்மை. இதை நாம் மனது வைத்தால் ஓரளவிற்கு சேமித்து வீட்டிற்கு மட்டுமல்லாமல் நாட்டிற்கும் கூட நன்மை பயக்கலாம்.எப்படி அதை சேமிப்பது என்று பார்த்தோமானால்,

வீட்டில் மின்சாரத்தைப் பயன்படுத்தி செயலாற்றிகொண்டிருக்கும் அனைத்துப் பொருளிலிருந்தும் உதாரணமாக மின்சார விளக்கு, மின் விசிறி போன்றவற்றின் தேவை முடிந்தவுடன் அதை உடனே நிறுத்தி விடவேண்டும்.
டீவி பார்த்து முடித்தவுடன் அதை நிறுத்தி விடுவதுடன் அதன் பிலக்கையும் நீக்கிவிடுவது நல்லது. டீவி மட்டுமல்லாமல் மியூசிக்சிஸ்டம், செல்ஃபோன், ஹேர் ட்ரையர், போன்று அனைத்துப் பொருட்களையும் கூட உபயோகத்தில் இல்லாத பொழுது இணைப்பை எடுத்து விடுவது நல்லது.
மேலும் கம்பியூட்டரையும் மற்றும் பிரின்டர் போன்று அனைத்து டிவைசையும் உபயோகத்தில் இல்லாத பொழுது இணைப்பை எடுத்து விடுவது நல்லது.
வாட்டர் ஹீட்டரில் போதுமான மிகக் குறைந்த ஹீட்டை மட்டும் செட்செய்து வைத்தால் கூட அதிக அளவு மின்சாரத்தை சேமிக்கலாம்.
வாஷிங் மிஷினில் டிரையரைப் பயன்படுத்தாமல் வெளியில் எடுத்து சாதாரணமாக காற்றிலேயே துணிகளை உலர்த்திக் கொள்ளலாம்.
டிஷ் வாஷரில் கூட பாத்திரங்களை உலர்த்தும் ஃபங்ஷனை தவிர்த்து கொள்ளலாம்.
ஃபிரிஜ்ஜை அடிக்கடி திறந்து மூடாமல் ஒரே நேரத்தில் தேவைபடும் பொருட்களை வெளியில் எடுத்துக் கொண்டு மூடிவிடலாம்.
சாதாரண வின்டோ ஏஸிகளுக்கு பதிலாக, சுவற்றில் பொருத்தும் ஸ்பிலிட் ஏஸியால் கூட அதிக அளவு மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

வீட்டில் ஹாலைத் தவிர்த்து மற்ற இடங்களில் லைட்டான நிறங்களில் பெயின்ட் செய்தால் அறைகள் குளிர்ச்சியாக இருப்பதைப் போல் உணரலாம்.
வீட்டைச் சுற்றிலும் மரம் செடி கொடிகளை கட்டிடத்திற்க்கு சேதாரமாகாமல் நன்கு இடைவெளிவிட்டு நட்டு வளர்த்தால் ஏஸி கூட தேவைப்படாது.மேலும் வீட்டிற்குள்ளேயே ஏராளமான செடி கொடிகளை கூட தொட்டிகளில் வளர்க்கலாம்.
மேலும் ஒரே அறையில் பல விளக்குகள், மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மின் விசிறிகள் பொருத்துவது தேவையில்லாத ஒன்று. ஆக இதைக் கூட தவிர்த்து விடலாம்.
குழந்தைகள் படிக்க பயன்படுத்தும் பல்ப்பை தவிர மற்ற இடங்களில் மிகவும் குறைந்த வாட்ஸ் உடைய பல்பை பயன்படுத்தலாம்.
வீட்டின் பொதுவான இடத்தில் ஒரு டியூப் லைட் இருந்தால் அதைக் கொண்டு எல்லா அறையிலும் வெளிச்சம் தெரிவதுப் போன்று அமைத்துக் கொண்டால் மிகவும் நல்லது.
இரவு நேரத்தில் மினசார வெளிச்சத்தில் சமைப்பது, துணிதுவைப்பது,அயன்போடுவது போன்ற விசயங்களை தவிர்த்து விடலாம்.

மேலும் எந்த விதமான அப்லையன்ஸ் வாங்கும் பொழுதும்,அல்லது எலக்ட்ரானிக்ஸை வாங்கும் பொழுதும் எனர்ஜி சேவிங்க்ஸ் என்ற முத்திரைப் பதித்த பொருளைய் வாங்கினால் விலை சற்று கூடியதாக இருந்தாலும் நிச்சயமாக மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை.

இவையெல்லாவற்றையும் விட உங்களுக்கு உதவியாக வீட்டு வேலைகளுக்கு ஒரு பணியாளரை அமர்த்திக் கொண்டு, துணிகளுக்கு இஸ்திரி போடுவதற்க்கு கூட வீடு வீடாக வந்து அந்த பணியைப் புரிகின்றவர்களிடன் துணிகளை அயர்ன் செய்துக் கொண்டு, இதனால் கூட மின்சாரத்தை மிச்சபடுத்துவதுடன் மற்றவர்களின் வாழ்க்கையிலும் கூட ஒளிவீச நாம் செய்யும் சிறு உதவியாக இருக்கும் என்பது என் கருத்து. நன்றி.

1. Use power saving bulbs from Wipro, Philips etc.

2. Switch off computer monitor if ur not working.

3. Defrost Fridge regularly.

4. Use study lambs.

5. Go to sleep early.

6. Use stabilizers wherever necessary.

--Chandru

******அன்பே சிவம்******

Another tip is, cook dinner early(before sunset) whenever possible... switch off the main switch of TV, MW, washing machine etc... it's said to consume some energy when in standby mode... I don't know if it'll save much energy & thereby money for us...;) But I do a few things like not wasting water,power, plastic bags, food items etc to do my bit in protecting the environment...only those who produce it know how much time & effort & inputs r needed to produce it... & ofcourse, as for plastic bags, we r already feeling the pinch... if we keep accmulating plastic bags at the same rate, it'll be our children who will be victims of it's ill effects... Lets do our bit in passing on this beautiful world to our next generation with only minimal damage...:)

Your plastic bag savings is a good idea

dont use steel items pls use only air tight containers

girija

தேவையில்லாமல் எரியும் லைட், ஃபான், யாருமே பார்க்காமல் ஹாலில் ஓடிக் கொண்டே இருக்கும் டி.வி., இதெல்லாம் அப்பப்போ ஆஃப் செய்தாலே போதும்.

கிரைண்டரில் அரிசி, பருப்பு அரைக்கும்போது, சரியான அளவு தண்ணீர் ஊற்றி, அப்பப்போ கொஞ்சம் தண்ணீர் தெளித்து, கிண்டி விட்டு, அரைத்தால் சீக்கிரம் அரைத்து எடுக்கலாம்.

மிக அதிகமான கரண்ட் ஏ.சி.க்குதான் ஆகும். ஏ.சி.யில் டைம் செட் செய்யலாம்.

இப்போ எனர்ஜி சேவர் லேபிள்களுடன் வரும் பொருட்களை வாங்கலாம்.

எனர்ஜி சேவர் பல்புகள், வாங்கி மாட்டினால், கரண்ட் செலவு குறையும்.

பொதுவாகவே ரொம்ப நாளைக்கு முன்னால் வாங்கிய பழைய எலெக்ட்ரிகல் பொருட்களை (மிக்ஸி, ஃபான், அயர்ன் பாக்ஸ் போன்றவை)மீண்டும் மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகித்தால், கரண்ட் அதிகமாக எடுக்கும். ரிப்பேருக்கு ஆகும் செலவை விட, சரியான கால இடைவெளியில் புதிய தரமான பொருட்களை வாங்கி உபயோகித்தால், கரண்ட் செலவு குறையும்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்