மஸ்ரூம் டெவல்

தேதி: May 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காளான் - 300 கிராம்
பொடியாக வெட்டிய வெங்காயம் - ஒரு கப்
பொடியாக வெட்டிய உள்ளி - 1/2 கப்
பெரிய சீரகம் - ஒரு டீஸ்பூன்
சிறிய சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
அரிந்த பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
தக்காளி கெட்ச் அப் - 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது


 

காளானை நன்கு கழுவி 4 அல்லது 6 துண்டுகளாக வெட்டவும்.
இதனை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு மேற்கூறிய எண்ணை, கெட்ச் அப், கொத்தமல்லி இலை தவிர்ந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான நெருப்பில் சூடாக்கவும்.
இதனுள் கலந்த கலவையை கொட்டி கிளறவும். பின் பாத்திரத்தை மூடி காளானை நன்கு அவிய விடவும்.
காளான் அவிந்ததும் மூடியை திறந்து நீர் வற்றும்வரை ஒரு கரண்டியால் நன்கு கிளறவும்.
கலவை வற்றி ஓரளவு வறண்டு வந்ததும் சூட்டை குறைத்து அதனுள் Tomato ketchup ஊற்றி கிளறவும்.
டெவல் தயார். இதனை பரிமாறும் பாத்திரத்தில் போட்டு கொத்தமல்லி இலை தூவி ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, சோறு, நாண் போன்ற எந்த வகை உணவுடனும் பரிமாறலாம்.
எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் எண்ணெயை குறைத்தும் சேர்க்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உள்ளி என்று பூண்டைதானே சொல்கிறீர்கள் இல்லை வேறு எதுவுமா......?

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஆமாம். நான் பூண்டைத்தான் உள்ளி என்பேன் :) சமைத்துப் பார்த்துவிட்டு எப்படி என்று கூறவும். நன்றி.