LIVING IN CANADA

Hello SAGODARIGALE,
I am living in Kuwait for the past 5 years. We are planning to relocate to Canada after a few months. So i would like to know from u which part of Canada would be good, for us, Indians. How is the life style and climate there...
latharajaram
,

ஹலோ லதா எப்படி இருக்கீன்றீர்கள்? கனடா வருவதற்க்கு ஒரு சில மாதங்கள் இருப்பதாக எழுதியிருந்தீர்கள் வாழ்த்துக்கள். கனடாவில் எங்கு வேண்டுமானாலும் லேன்டிங் செய்யலாம். ஆனால் உங்களின் வேலையின் நிமித்தம் தான் வாழும் Province ஸ்ஸை முடிவுச் செய்கின்றது. ஆகவே குடும்பத்துடன் வந்துவிடுகின்றீர்கள் என்றால் Alberta, என்ற Province நல்லது. வேலை வாய்ப்புகள் முக்கியமாக ஆயில் ரிஃபைனரி போன்ற ஆயில் செக்டார் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவர்களுக்கு ஏற்ற பகுதி
அது.

மற்றபடி உங்கள் கணவரைத் தவிர்த்து நீங்களும் குழந்தைகளும் மட்டும் தங்கியிருக்க முடியுச் செய்திருந்தால் Ontario என்ற Province நல்லது. காரணம் அங்கு இந்தியர்களும் தமிழர்களும் அதிகம் வசிக்கின்றார்கள்.ஆகவே தனிமையில் இருப்பதற்க்கு பயமில்லாமல் உங்களுக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

பொதுவாக வாழ்க்கை முறையைப் பற்றி கூறுவதற்க்கு ஒன்றுமில்லை. நல்லதும் கெட்டதும் அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது தானே. என்னைப் பொருத்தவரையில் நான் பிறந்த சுதந்திர மண்ணில் கிடைக்காத சுதந்திரத்தை இந்த நாட்டில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். மற்றபடி கிளைமட்டை கூறி உங்களை உறைய்ய வைக்க வேண்டாம், நீங்களே வந்து பார்க்கத்தானே போகின்றீர்கள்.

நிச்சயமாக உங்களுக்கு இந்த நாட்டில் எந்த விதத்திலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதற்க்கு நான் கியாரண்டி கொடுக்குமளவிற்க்கு மனிதநேயம் வாய்ந்த, அமைதியான, வளமைவாய்ந்த நாடு இந்த கனடா என்று பெருமையாக கூறுவேன்.நன்றி.

மேலும் சில பதிவுகள்