பயனுள்ள ஆலோசனைகள்

அறுசுவை வளர்ச்சியில் ஆர்வம் உள்ள ஏராளமான நேயர்கள், அவ்வபோது தங்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை எனக்கு கொடுத்து வருகின்றனர். தங்களின் எதிர்பார்ப்பையும், தேவையையும் எனக்கு தெரிவிக்கின்றனர். எளிதாக செய்ய முடிந்தவற்றை உடனுக்குடன் செய்துவிடுகின்றேன். சிலவற்றை செய்வதற்கு தாமதம் ஆகிவிடும். சில ஆலோசனைகளை செயல்படுத்த முடியாமல் போய்விடும். அதற்கான காரணங்களை ஆலோசனை வழங்கியவருக்கு நான் விளக்கிவிடுவேன்.

சமீபத்தில் சகோதரி ஸ்ரீதேவி அவர்கள் ஒரு பயனுள்ள ஆலோசனை வழங்கியிருந்தார். குறிப்புகள் வகைப்படுத்தலில் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தினால் வசதியாக இருக்கும். அதாவது தயாரிக்கும் நேர அடிப்படையில் குறிப்புகளை வகைப்படுத்தினால், பலருக்கும் அது உபயோகமாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். உதாரணமாக குழம்பு வகையில் 5 நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய குழம்புகள், 10 நிமிடத்தில் தயாரிக்கக் கூடிய குழம்புகள் என்று உபபிரிவுகள் கொண்டு வரலாம் என்று குறிபிட்டு இருந்தார். உண்மையில் பயனுள்ள ஆலோசனை. ஆனால், செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்புகள் பலரிடம் இருந்து பெறப்படுகின்றன. கூட்டாஞ்சோறு மூலம் ஏராளமான குறிப்புகள் வந்து சேருகின்றன. இந்த குறிப்புகள் அனைத்திலும் அதனைத் தயாரிக்க ஆகும் நேரத்தின் அளவு சரியாக குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே சகோதரி கேட்டிருந்த வசதியை செய்வதற்கு முடியும்.

சமையலில் இரண்டு மாதிரியான நேர அளவுகளை குறிப்பிடுவர். ஒன்று ஆயத்த நேரம், மற்றொன்று சமைக்கும் நேரம். இரண்டு நேர அளவுகளையும் வைத்து குறிப்புகளை வகைப்படுத்துதல் அவ்வளவு நன்றாக இருக்காது. உதாரணமாக தோசையை 3 நிமிடத்தில் சமைத்துவிடலாம். அதற்கு மாவு தயாரிக்க நீண்ட நேரம் ஆகும். இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, 10 மணி நேரத்தில் தயாரிக்கும் உணவுகள் பிரிவில் தோசையை சேர்த்தால் நன்றாக இருக்காது. அதே நேரத்தில் 3 நிமிடத்தில் தயாரித்துவிடும் உணவுகள் பிரிவில் சேர்ப்பதும் சற்று பொருந்தாது. இந்தப் பிரச்சனையில் நாம் ஏதேனும் ஒரு நேரத்தை மட்டும் எடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு. கண்டிப்பாக ஆயத்த நேரத்தை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, சமைக்கும் நேரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உணவுகளை வகைப்படுத்தலாம் என்பது எனது எண்ணம். நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் குறிப்புகள் பங்களிக்கும் சகோதரிகள் இதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே இந்த வசதி சாத்தியம். எனவே, சகோதரிகள் இனி உணவு தயாரிக்க ஆகும் நேரத்தையும் சரியாக குறிப்பிடவும்.

அடுத்து சகோதரி கௌரி அவர்கள் கொடுத்திருந்த ஆலோசனை. இதுவும் பயனுள்ளதே. அறுசுவையில் ஏராளமான குறிப்புகள் உள்ளன. குறிப்புகளைப் பார்வையிட்டவுடனே அதனை யாரும் செய்து பார்த்துவிடப்போவதில்லை. சில நல்ல குறிப்புகளை குறித்து வைத்துக்கொண்டு பின்னர் தேவையான நேரத்தில் செய்து பார்க்கின்றனர். அப்படி குறித்து வைத்துக் கொள்வதற்கு அவர்கள் எந்த முறையை பயன்படுத்துகின்றனர் என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றது. சிலர் prinout எடுத்து வைத்துக்கொள்கின்றனர். சிலர் copy செய்து வைக்கின்றனர். சிலர் முகவரியை குறித்துக்கொள்கின்றனர். சிலர் bookmark செய்கின்றனர்.

சகோதரி அவர்கள், bookmark எளிதாக செய்வதற்கு வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். bookmark செய்வதை இரண்டு விதமாக செய்யலாம். ஒன்று browser ல் உள்ள favourites/bookmarks மூலம் தேவையானப் பக்கத்தினை bookmark செய்வது. இதற்கு தனியாக எதுவும் தேவையில்லை. பொதுவாக அனைத்து browserகளிலும் இந்த வசதி உள்ளது. இதில் உள்ளப் பிரச்சனை என்னவென்றால் நீங்கள் கம்ப்யூட்டரை மாற்றி வேறு எதாவது ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தினால் அங்கு இந்த bookmarks இருக்காது. இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு, bookmark செய்து கொள்வதற்கென்றே உள்ள இணையதளங்களைப் பயன்படுத்தலாம். இதில் எந்த கம்ப்யூட்டரை உபயோகிக்கின்றீர்கள் என்பது பிரச்சனையாக இருக்காது.

ஒரே இணையத்தளத்தின் பல்வேறுப் பக்கங்களை மேற்கூறிய முறைகளில் புக்மார்க் செய்தல் அவ்வளவு நன்றாக இருக்காது. அப்படி புக்மார்க் செய்யும் போது அந்த பக்கத்தின் முகவரிதான் store ஆகும். எந்த குறிப்பு என்பது தெரியாது. அதனை நீங்கள்தான் குறிப்பிடவேண்டியிருக்கும். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க அறுசுவை தளத்திலேயே, பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டும் குறிப்புகளை bookmark செய்து கொள்ளும் வசதியை கொண்டு வரலாம். add to my favourite என்பது போன்ற ஒரு link ஐ அனைத்து குறிப்புகளிலும் கொடுத்துவிடவேண்டும். அதனை கிளிக் செய்தால், அந்த பயனீட்டாளருடைய favourites பட்டியலில் அந்த குறிப்பு சேர்ந்துவிடவேண்டும். பெயர்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் இந்த வசதியைக் கொடுக்க முடியும். இந்த ஆலோசனையை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றேன். இதற்கு கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். என்னுடைய தற்போதைய வேலைப் பளுவில் உடனே முடியுமா என்பது தெரியவில்லை. கால தாமதம் ஆனாலும், கண்டிப்பாக சகோதரிகள் கேட்டுள்ள வசதிகளை செய்து கொடுப்பேன்.

நல்ல ஆலோசனைகள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும், எனது விளக்கத்தை அளிக்கவும் இந்த பதிவை கொண்டு வந்தேன். இது போன்ற பயனுள்ள ஆலோசனைகள் கொடுக்க விரும்புவோர் அவற்றை இங்கே தெரிவிக்கலாம். உங்கள் அனைவரிடம் இருந்து மேலும் பல நல்ல ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

ஒரு யோசனை....கூட்டாஞ்சோறு பகுதியில் உள்ள உறுப்பினர்களின் குறிப்புகளுக்கு சென்றால் அவர்களுடைய எல்லா குறிப்புகளும் உள்ளது. அனால் நமக்கு தேவையான குறிப்புக்கு செல்ல ஒவ்வொரு குறிப்புக்கும் செல்லவேண்டியுள்ளது.

ஒவ்வொரு உறுப்பினர்களின் குறிப்புகளும் அதன் பிரிவுகளுடன் இருந்தால் சுலபமாக இருக்கும்.
உதாரணத்திற்க்கு side-ல் உள்ளது போல எல்லா பிரிவுகள் தேவையில்லை.
வெரும் பக்க உணவுகள் என்றொரு பிரிவு, அதன் கீழ் பக்க உணவு குறிப்புகள், குழம்பு வகைகளின் கீழ், அந்த வகை குறிப்புகள், என்பது போன்று பொது தலைப்புகள்(headings) இருந்தால் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி...

நன்றி...

அறுசுவையில் நிறைய டிப்ஸ் மன்றத்தில் உள்ளது.
என்னுடைய ஆலோசனை:
மன்றத்தில் அல்லாது பொதுவாக "குறிப்பு சேர்க்க"-வில் டிப்ஸ் என்று ஒரு தலைப்பு இருந்தால் சுலபமாக இருக்கும். அதேபோல வலது புறத்தில் இருக்கும் நாவிகேஷன் பாரில் டிப்ஸ் அல்லது ஆலோசனைகள் என்று ஒரு தலைப்பு இருந்து அனைத்து டிப்ஸ்-ம் அங்கு கிடைத்தால் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனென்றால் மன்றத்திற்க்கு சென்றால் தான் பார்வையிடமுடியும் என்பது புதிதாக வருபவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அல்லவா.
பழைய அறுசுவையில் இருந்தது போல இங்கும் ஒரு தலைப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கேட்டுகொள்கிறேன்.
நன்றி...

நன்றி...

Bachelors சமையல் என்று ஒரு தலைப்பு கொடுத்தால் நிறைய புதிதாக சமைக்க கற்றுகொள்ளும் bachelors-களுக்கு உதவியாக இருக்கும். இதில் மிக மிக சுலபமாக செய்ய கூடிய உணவு குறிப்புகள் இருந்தால் அவர்கள் ஒவ்வொன்றையும் தேடவேண்டியதில்லை. கொஞ்சம் user-friendly -யாக இருக்கும்.

இது என் கணவருடைய ஆலோசனை. மனைவி ஊருக்கு சென்றுவிட்டால் சமைக்க சுலபமாக இருக்கும் குறிப்புகள் ஒரே இடத்தில் கிடைத்தால் சுலபமாக இருக்குமே என்று சொன்னார்.

நன்றி...

நன்றி...

என்ன அண்ணா,
நான் மே 23 அன்றைக்கு கொடுத்த ஆலோசனைக்கு நீங்கள் பதிலே கொடுக்கவில்லை.
நல்ல ஆலோசனையாக இல்லையா ?
நன்றி...

நன்றி...

தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன். உங்களுடைய பதிவை அன்றே பார்த்துவிட்டேன். அதை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது. யோசித்து பின்னர் பதில் அளிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். தாமதமாகிவிட்டது.

கூட்டாஞ்சோறு உபபிரிவுகள் குறித்த உங்களின் ஆலோசனை நல்ல ஆலோசனைதான். கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்க்கப்படும் குறிப்புகள் அனைத்தும் உறுப்பினர்கள் நேரடியாக சேர்க்கும் குறிப்புகள் என்பதை தாங்கள் அறிவீர்கள். குறிப்புகள் எப்படி சேர்க்கப்படுகின்றன என்பதையும் ஒரு கூட்டாஞ்சோறு உறுப்பினர் என்ற முறையில் தாங்கள் நன்கு அறிவீர்கள். பிரிவுகளை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் குறிப்புகளின் பிரிவுகள் சரியாக தேர்ந்தெடுக்கப்படாமல், default section ஆகிய சிறப்பு உணவு பிரிவுக்கு சென்று விடுகின்றது. நீங்கள் சிறப்பு உணவு என்ற பிரிவில் சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏராளமான குறிப்புகள் அந்த பக்கத்தில் உள்ளன. அவற்றில் நிறைய குறிப்புகள் மற்ற பிரிவுகளுக்கு செல்லவேண்டியவை. அதுமட்டுமன்றி, எல்லா உறுப்பினர்களும் எல்லா பிரிவுகளிலும் குறிப்புகள் கொடுப்பது இல்லை. உப பிரிவுகளின் கீழ் குறிப்புகள் சில இருந்தால்தான் நன்றாக இருக்கும்.

கூட்டாஞ்சோறு பக்கங்கள் manual ஆக உருவாக்கப்படுபவை அல்ல. coding மூலம் பட்டியலிடப்படுகின்றன. ஒரு உறுப்பினர் கொடுத்துள்ள குறிப்புகளை அவரது உறுப்பினர் எண்ணை வைத்து எளிதாக ஒரே ஒரு sql query மூலம் எடுத்து பட்டியலிட்டுவிடலாம். அதேசமயம், அந்த குறிப்புகள் எந்தெந்த பிரிவைச் சேர்ந்தவை என்பதை கண்டறிந்து பட்டியலிட நிறைய condition statements கொடுக்க வேண்டியிருக்கும். பக்கங்கள் open ஆக மிகவும் நேரம் எடுக்கும்.

அல்லது ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு sql query கொடுத்து அதன் மூலம் பட்டியலிடலாம். இதுவும் கொஞ்சம் நேரம் எடுக்கும். முயற்சி செய்கின்றேன். வேறு ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா என்பதையும் யோசித்துப் பார்க்கின்றேன். உங்கள் ஆலோசனைக்கு செயல்வடிவம் கொடுத்தால் பலருக்கும் அது உபயோகமாய் இருக்கும்.

bachelor's சமையல் பிரிவு கண்டிப்பாக இடம்பெறும். இது சம்பந்தமாக ஏற்கனவே நான் வேலைகளை ஆரம்பித்தேன். இடையில் அறுசுவையை நிறுவனமாக்குவது சம்பந்தமான வேலைகளில் மாட்டிக்கொண்டு விட்டதால், உடனே அதை கொண்டு வரமுடியவில்லை. நிச்சயம் பேச்சுலர் சமையல் பிரிவை வெகுவிரைவில் கொண்டு வருகின்றேன். அதே போல் டிப்ஸ் பிரிவையும் வெகு விரைவில் கொண்டு வந்துவிடுகின்றேன். டிப்ஸ் பகுதியை சற்று வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்பது எனது எண்ணம். கார்ட்டூன் மாதிரியான படங்களுடன் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். நன்கு படம் வரையத் தெரிந்த, படம் வரைவதில் ஆர்வமுடையவர்கள் யாரேனும் உதவினால், அறுசுவையில் நிறையப் படங்கள் சேர்க்கலாம்.

உங்கள் ஆலோசனைகள் அனைத்தும் மிக நல்ல ஆலோசனைகளே. கூடுமானவரையில் அவைகளை விரைவில் செயல்படுத்த முயற்சி செய்கின்றேன்.

உங்களுக்கு இருக்கும் வேலைபளுவிலும், நீங்கள் எல்லோருக்கும் பதில் அளிக்கிறீர்கள். அதுக்காக நான் நன்றியை கூறவேண்டும். நீங்கள் வருந்தத்தேவையேயில்லை.

"குறிப்பு சேர்க்க" - வில் உள்ள எல்லா listbox-யிலும் default selection உள்ளது. அவ்வாறு அல்லாமல் குறிப்பு கொடுப்பவர்களே select செய்யுமாறு அமைத்தால், குறிப்புகள் சரியான பிரிவுக்குள் செல்லும் என நினைக்கிறேன். இதை ரொம்ப நாளைக்கு முன்னரே சொல்லனும் என நினைத்தேன். ஆனால் மறந்துவிட்டேன்.

அமாம் அண்ணா, நீங்கள் சொன்னபிறகு தான் யோசித்தேன். நிறைய condition statements தேவைப்படும் என்று. ஏனென்றால் ஒவ்வொன்றும் தனி பிரிவுகளாக சென்று சேர்ந்திருக்கும். அப்புறம், "கோழி பிரியாணி", "கோழி" பிரிவிலும், சாதம் பிரிவிலும், இஸ்லாமியர் சமையல் பிரிவிலும் இருக்கும். இதெல்லாம் ரொம்ப கடினமான வேலை தான்.

உங்களுடைய டிப்ஸ் பகுதி குறித்த ஐடியாவும், ரொம்ப நல்ல ஐடியாவாக உள்ளது. அதனை பார்க்க இப்போதே ஆவலாக உள்ளது.

இன்னுமொறு ஆலோசனை......கூட்டாஞ்சோறு பகுதியில் display-வில் id அல்லாமல் பெயர் display ஆனால் நன்றாக இருக்கும்.

நன்றி, அண்ணா...

நன்றி...

அன்பு தங்கைக்கு,

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

//"குறிப்பு சேர்க்க" - வில் உள்ள எல்லா listbox-யிலும் default selection உள்ளது. அவ்வாறு அல்லாமல் குறிப்பு கொடுப்பவர்களே select செய்யுமாறு அமைத்தால், குறிப்புகள் சரியான பிரிவுக்குள் செல்லும் என நினைக்கிறேன்//

உறுப்பினர்கள் பிரிவுகளை செலக்ட் செய்தால்தான் இந்தப் பிரச்சனையே இல்லையே. default option ஐ நீக்கிய பின்பும் அவர்கள் பிரிவுகளை செலக்ட் செய்யாது போனால் என்ன ஆகும் யோசியுங்கள். குறிப்புகள் எந்தப் பிரிவிலும் சேராது போய்விடும். எனவே, இது போன்ற list box களில், default selection என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, எந்தப் பிரிவைச் சேர்ந்த உணவு அது என்று உறுப்பினர்களுக்கே தெரியாத பட்சத்தில் அவை default ஆக சிறப்பு பிரிவிற்கு வரவேண்டும். சம்பந்தமேயில்லாத பிரிவிற்கு சென்றுவிடக்கூடாது. Default optionஐ நீக்குவது இதற்கு சரியான தீர்வாக இருக்காது என்று எண்ணுகின்றேன். கூட்டாஞ்சோறு உறுப்பினர்கள், கொஞ்சம் சோம்பல் படாமல், பொருத்தமான பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்.

கூட்டாஞ்சோற்று பக்கத்தில் உறுப்பினர்களின் ஐடிக்கு பதிலாக பெயர்களைக் கொண்டுவர ஆரம்பத்திலேயே முயன்றேன். பெயர்கள் தனி table (profile) லிலும், ஐடி தனி tableலும் இருப்பதால், இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து , ஒவ்வொரு உறுப்பினருக்கும் பெயரை கொண்டு வரவேண்டியிருந்தது. இதனால் பக்கம் open ஆக கொஞ்சம் நேரம் எடுத்ததால், அதை விட்டுவிட்டேன். தற்போது வேறு சில முறைகளில் அதை முயன்று பார்க்கின்றேன்.

மேலும் ஒரு நல்ல ஆலோசனையை வழங்கி இருக்கின்றீர்கள். மிக்க நன்றி. விரைவில் அவை எல்லாவற்றிற்கும் செயல்வடிவம் கொடுக்கின்றேன்.

என்ன அண்ணா,
இன்னமும் தூங்கலையா...

listbox selection-ம் கட்டாயமாக்கினால், எல்லோரும் select செய்துவிட்டு பின் பதிவு செய்வார்கள்.

நீங்கள் சொன்ன பிறகு தான் பார்த்தேன், சிறப்பு உணவில் நிறைய குறிப்புகள் இருப்பதை. அதுவும் பல நல்ல குறிப்புகள். நிறைய பேர், அந்த பிரிவுக்கு என்னைபோல செல்லாமலே இருக்கலாம். ஏனென்றால் ஏதாவது செய்ய நினைத்தால், உதரணத்திற்க்கு "இறால்" கொண்டு சமைக்க நினைத்தால் "இறால்" பிரிவிற்க்கு செல்வோமே தவிர சிறப்பு உணவிற்க்கு செல்லமாட்டோம் அல்லவா. ஆனால் "மிளகு இறால் பொறியல்" சிறப்பு பரிவில் உள்ளது.ஆனால் இறால் பிரிவில் இல்லை. இதுபோல இன்னும் நிறைய குறிப்புகள் அங்கே உள்ளது. கட்டாயமாக்கினால் ஒவ்வொருவரும் பார்த்து select செய்வார்கள், அண்ணா. முயற்சித்துப்பாருங்கள்...

நன்றி...

நன்றி...

நீங்கள் கூட்டாஞ்சோறு உறுப்பினாரிடம் அவர்களின் குறிப்புகளுக்கு போய் மாற்றம் செய்க(எடிட்) சென்று அவர்களையே அதன் அதன் பிரிவுக்கு மாற்றசொல்லாமே உங்களுக்கு வேலை சுலபமாக இருக்கும் அல்லவா

நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

தனி ரெசிப்பிகள் மற்றும் கூட்டாஞ்சோறு பகுதியில் ரெசிப்பிகள் பார்க்கும் போது, அவை 'யாரும் சமைக்கலாம்' பகுதியில் வரும் போட்டோவுடன் கூடியதாக இருந்தால், அதற்கு பக்கத்தில் கேமரா மாதிரி ஒரு அடையாளம் போடலாமே!

மேலும் சில பதிவுகள்