chiid with asthma

my son is 2 and half and diagnosed with asthma yesterday. the main symptom is wheeze and cough. can anyone tell any home remedies to control them.
he just vomits and all .and being prescribed ventolin puffer and has been told to take steriods regularly.so much wooried.
can anyone suggest anything i can do as a mother
thanks
gaya

ஹலோ gaju எப்படி இருக்கீங்க? தங்கள் குழந்தைக்கு ஏற்ப்பட்டுள்ள அசெளகரியத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதனைப் பற்றி எனக்கு தெரிந்ததைக் கூறுகின்றேன்.
பொதுவாக சிறிய குழந்தைகளுக்கு இருக்கும் இதுப் போன்ற பிரச்சனைகள், அவர்கள் வளர வளர சரியாகிவிடும். பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளிகூடம் போக ஆரம்பித்தவுடன் குறைய ஆரம்பிக்கும், கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் தான் இந்த ஆஸ்த்துமா பிரச்சனையிருக்கும், பிறகு முழுமையாக குணமடைந்து விடுவார், கவலை வேண்டாம்.

பொதுவாக ஆஸ்த்துமா பிரச்சனை சுற்றுபுற சூழ்நிலைக் காரணமாக ஒவ்வாமை என்ற அலர்ஜியின் காரணமாகவும், மரபியல் காரணமாக முக்கியமாக தந்தை வழியிலிருந்தும் வர காரணமாகின்றது என்று கேட்டிருக்கின்றேன். எதுவாக இருந்தாலும் நல்ல சுகாதாரமான சூழ்நிலையில் இந்த பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைத்துவிடலாம்.

வீட்டில் தூசு அதிகம் படியவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
முக்கியமாக குழந்தையின் அறையில் Air purifier ரை ஒன்று வாங்கி வைக்கவும்.அப்படி வாங்கும் பொழுது பில்டர் தட்டுபாடில்லாமல் கிடைக்கும் மாடலை உறுதி செய்துக் கொண்டு வாங்கவும்.இதனால் ஓரளவிற்க்கு அறையிலுள்ள காற்றை தூய்மையாக வைத்திருக்கலாம்.

இரவில் முக்கியமாக மழைக்காலத்தில் Vicks vaporizer என்ற சாதனத்தை வைத்தீர்களானால் மிகவும் நல்லது. இந்த இரண்டு சாதனங்களையும் குழந்தையின் அறையில் வைத்து உபயோகித்தீர்களானால் குழந்தைக்கு பாதி பிரச்சனை குறைந்த மாதிரிதான்.

உங்கள் வீட்டில் தரையில் கார்ப்பெட் இருந்தால் அதை அப்புறப்படுத்தி விட்டு தரையை vinyl ஷீட்டால் அல்லது அதைப் போன்ற பொருளால் ஒட்டி வைத்துருப்பது மிகவும் நல்லது. கார்ப்பெட்டின் மீது கூட ஒட்டிவைத்து தூசு பரவாமல் தடுத்துவிடலாம்.

குழந்தையின் படுக்கையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. படுக்கை விரிப்புகள் கூட 100% cotton னாளான படுக்கை விரிப்புகள் தலையணைஉறைகள்,கம்ஃபட்டர்கள்,போன்றவற்றை பயன் படுத்தவும். காரணம் மற்ற Fabrics லிருந்து கண்ணுக்கு தெரியாமல் கூட தூள் தூளாக உதிர்ந்து காற்றை மாசு படுத்தும். காட்டன் பெட் செட்டுக்களில் இந்த பிரச்சனை இருக்காது.

வீட்டில் ஏர் கன்டிஷனர் இருந்தால் அதிலுள்ள பில்ட்டரை அடிக்கடி மாற்றி விடுவது நல்லது. காரணம் இதனால் கூட குழந்தைகளுக்கு இதுப் போன்ற அலர்ஜிகள் ஏற்ப்பட் வாய்ப்புள்ளது.

மேலும் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான ஆகாரத்தையும் கவனத்தில் கொண்டு எதைக் கொடுத்தாலும் ரூம் டெம்பரேச்சரில் அல்லது மிதமான சூட்டில் கொடுக்கவும். குளிர்ந்த நிலையில் இருப்பதை தவிர்த்து விடலாம்.

இதுப் போன்று மற்றும் நீங்கள் வசிக்கும் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப்ப குழந்தைய்யை நல்ல ஆரோக்கியமான சூழ்திலையில் வைத்திருந்தீர்களானால் இந்த பிரச்சனைய்யை அறவே நீக்கிவிடலாம். மேலும் குழந்தைக்கு இதனால் எந்த தாழ்வுணர்ச்சியும் வந்து விடாமல் எந்நேரமும் ஆடி, பாடி மகிழ்ந்து நார்மலாக இருக்க அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.வேறு ஏதாவது சந்தேகமிருந்தாலும் கேட்டவும். நன்றி.

dear manohari madam
thanks for ur advice. i will ask few more questions to u. i joined yesterday in arusuvai with a hope that u will definitely respond . thanks .i will try ur suggestions.
sorry for writing in english.please write to me about vegetarian foods.as i am giving only sambar rasam he doesnot eat any bread or cereals and vomits everything.eating only milk like baby even at midnight (bottle feed)he has been vomitting a lot but it has been reduced as i suspect gastro problem. he doesnot want to take ventolin puffer and says it is givng him discomfort.we dont know we have to follow advice from doctor .we live in sydney and here winter now so we put oil heater everyday is it ok to do that. madam please respond to me . i ahve sleepless nights because of him as he coughs for 10 times continuously and as soona s he drinks milk it goes taht is why i am not sure whether he has asthma .please advice us mentally t cope with this problem.planing to gov india chennai this november shall we go or not. thanks madam.

ஹலோ gaju டியர், அறுசுவை மூலமாக தங்களுக்கு உதவுவதில் எனக்கும் மனநிறைவு கொடுக்கின்றது. மருத்துவரீதியா இல்லாவிட்டாலும் என்னுடைய சொந்த அனுபவங்களின் மூலமாகத்தான் தங்களை போன்ற தாய்மார்களுக்கும் ஆலோசனைகளை கூறிவருகின்றேன். ஆகவே நிச்சயமாக நான் கூறிய ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றாவது தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் தான் மேற்கொண்டு தொடருகின்றேன்.

பொதுவாக எல்லா குழந்தைகளுமே சாப்பாடு விசயத்தில் ஒத்துழைப்பு தரமாட்டார்கள். காரணம் வயிற்றில் சிறிதளவு உணவுச் சென்றவுடனே பசி போய்விடுவதால் அம்மா கொடுப்பதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தெரிவதில்லை.ஆகவே நீங்கள் தான் எப்படியாவது ஏமாற்றி கொடுக்க வேண்டும்.

சாம்பார் ரசம் போன்ற உணவுகளில் குழந்தைக்கு போதுமான ஒரு சத்தும் கிடைக்காது. ஆகவே பொங்கலைப் போன்று பருப்பையும் அரிசி மற்றும் காய்கறிகளை ஒன்றாக வேகவைத்து குழந்தைக் கென்று தனியாக செய்து அதில் ஒரு சிட்டிகை உப்பையும், மிளகுத்தூளையும் போட்டு கொஞ்சம் நெய்யை ஊற்றி தினமும் இரண்டு வேளை கொடுக்கவும்.
காரம் புளி எல்லாம் குழந்தைக்கு தேவையில்லை.

அதைப் போல் வேகவைத்த சாதத்துடன்,துருவிய காரட் போன்ற காய்கறிககளுடன், பிரட் துண்டுகள்,துருவிய சீஸ், மிளகுத்தூள், உப்புத்தூளைச் சேர்த்து, மேலும் உங்கள் பழக்கத்திலிருந்தால் சிறிது இஞ்சி பூண்டையும் சேர்த்து நன்கு கைகளால் பிசந்து தோசைவார்க்கும் கல்லில் சிறிது சிறிதாக தட்டி வடைப் போல் சுட்டு குழந்தைக்கு கொடுக்கவும்.
இதைப் போலவே தானியங்களை ஊறவைத்து அரைத்து, அடை போல வார்த்து கொடுக்கவும்.

நாம் சாப்பிடும் டிசனில் தான் குழந்தை சாப்பிட வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கும் பிடித்த மாதிரி தான் நீங்கள் புதிது புதிதாக கண்டு பிடித்து தயாரிக்க வேண்டும்.

காய்கறிகள், மற்றும் கீரைவகைகளை நன்கு வேகவைத்து கடைந்து திக்கான சூப்பாக தரலாம்.
கெட்டியாக தயிர்சாதம் தரலாம்.
பழங்களைகூட பாலில் சேர்த்து அரைத்து குடிக்கச் செய்யவும்.
சீஸ்ஸை சிறிய அளவில் துண்டுகளாக நறுக்கி கொடுக்க வேண்டும்.
வெறுப் பாலை கொடுக்க வேண்டாம். சிறிது தேனைச் சேர்த்து கொடுக்கவும், அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும்.

வாந்தி எடுத்தாலும் கூட திரும்ப திரும்ப ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு காலத்தில் எனது முழூ நேர வேலையே குழந்தைகளுக்கு சோறு ஊட்டிக் கொண்டிருப்பது தான். அதுவும் என் மூத்தப் பிள்ளையை வளர்க்க நாங்கள் பட்டபாடு இருக்கின்றதே, இன்னும் தீரவில்லை.

ஆகவே தங்களின் குழந்தைக்கு எதைக் கொடுத்தாலும் சத்து நிறைந்ததாக திடமானதாக கொடுக்கவும். போதிய நோய்தடுப்புச் சக்தி வந்துவிட்டாலே குழந்தைகளுக்கு பிரச்சனைகள் குறைந்துவிடும்.

மேலும் அறையை சூடுபடுத்த ஆயில் ஹீட்டர்ஸ்ஸை நானும் பயன்படுத்தியிருக்கின்றேன்.அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே நினைக்கின்றேன்.ஆனால் நான் கூறிய Air purifier கட்டாயம் குழந்தையின் அறையில் வைக்கவும்.

சென்னைக்கு போகப்போவதாக கூறியிருந்தீர்கள். அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கின்றேன். ஊர் மாற்றம்கூட குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் நம்மூரில் அடிக்கும் வெய்யிலில் இந்த Dust mites எல்லாம் கதறிக் கொண்டு ஓடிவிடும். ஆகவே அங்கு குழந்தைக்கு இருக்கும் இதுப் போன்ற அலர்ஜி கூட காணாமல்போய்விடும் என்று தான் நினைக்கின்றேன்.

எல்லாவற்றையும் விட மருத்துவர் குழந்தைக்கு கொடுக்கும் சிகிச்சையில், மருத்துவரின் ஆலோசனைப்படி கேட்டு நடப்பது தான் நல்லது.மேற்கொண்டு இந்த பதிவைக் குறித்து வேறு ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேட்கவும்.நன்றி.

Hi gaju,
Dont worry about asthma...i have 2 sons, both of them had asthma from the age of 3..now they are 11years and 7 years...Its true that problem is reducing when kids started growing..nowadays very very rarely my kids r getting wheezing..
Try to avoid, applying face powder,sambrani,udhu vathi(doop sticks),perfumes..these smells causes continuous coughing..Mostly any new smells causes coughing...

Whatever milk u r giving, dilute and give,becoz thick ones causes flum and increases the cough...then u can give wheezing syrups also...
when the wheezing is severe,i used to give neubulizer for my kids.. so ask ur doctor whether u can give for ur child.. take care
latharajaram

sorry for the delayed response and i couldnot come to net. my son is better and we bought allthings like air purifier vaporiser and all.eating ok.still coughing not recovered completely.like u said i am trying all recipes .i really want to spend time in writing to u all.if we didnot give him puffer he is sick and weather here is pretty bad at the moment.thnaks for the reply really appreciate it. luv to write in tamil. give me some time i will learn.

dear latha
my son is slightle better not recovered completely looks like relapsing again. i want to ask u some questions as u have experienced the same. how did u encourge them to play he says running gives cough.cough is the problem. like u all said i am giving diluted milk .i am planning to continue my studies her in a medical uni next year i am just wondering will that be possible i mean time wise and will he be sick again and again .though i have seen patients this is the first time i am seeing on my own.it is hard . please help . he is taking puffer ventolin and another preventative puffer as it is winter here.please write to me . i am sure i have written properly these days as he is sick i couldnot concentrate on writing. is there any home medicine i should follow.
thanks in advance
anxious mother.

மேலும் சில பதிவுகள்