குடலை இட்லி

தேதி: May 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி-1 கப்
புழுங்கலரிசி- 1 கப்
முழு உளுந்து-2 கப்
தயிர்- அரை கப்
தேங்காய்த்துருவல்- அரை கப்
கறிவேப்பிலை-ஒரு கை
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
பெருங்காயப்பவுடர்- 1 ஸ்பூன்
நெய்-கால் கப்
தேவையான உப்பு


 

அரிசி வகைகளையும் உளுந்தையும் ஒன்றாகவே இரவில் ஊறவைத்து மறு நாள் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
தேவையான உப்பைச் சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் மாவைப் பொங்க விடவும்.
மாவில் தயிரையும் தேங்காய்த்துருவலையும் கறிவேப்பிலையையும் நெய்யையும் சேர்க்கவும்.
மிளகையும் சீரகத்தையும் பெருங்காயத்தூளுடன் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்து மாவில் சேர்க்கவும்.
மாவை நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து பிறகு இட்லிகள் சுடவும்.


மேலும் சில குறிப்புகள்