Hi Manokiri medam

ஹாய் மனோகிரி மேடம் ,கரண்டை சிக்கனமாக யூஸ்பன்னுவதற்கான டிப்ஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.நன்றி மேடம்.
எனக்கு ஒரு சந்தேகம் மேடம்.
டாபர் ஆம்லா ஆயில் ஐ தலைமுடிக்கு யூஸ் பன்ன்னினால் முடிக்கு அடர்த்தி கிடைக்கும் என்று என்னுடைய தோழி சொன்னாள். அவள் சொன்னதை கேட்டு நானும் ஆம்லா ஆயில் வாங்கியும் விட்டேன்.ஆனால் டாபர் ஆம்லா ஆயில் கவரில் ஆயிலை தலைமுடிக்கு தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து சாம்பூ போட்டு குளிக்க வேண்டும் என்று எழுதி இருந்தது.எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஆயில் தேய்த்தவுடன் கண்டிப்பாக சாம்பூ போட்டுதான் குளிக்க வேண்டுமா?அதோடு வாரத்துக்கு 3 நாட்கள்தான் ஆம்லா ஆயிலை யூஸ் பன்னனுமா?
என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் please.thankyou medam.

ஹலோ ரம்பா எப்படி இருக்கின்றீர்கள்? மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதற்கான டிப்ஸ் தங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் டாபர் ஆம்லா ஹேர் ஆயிலை பற்றிய சந்தேகத்திற்க்கு விடையாக, அதன் கவரில் உள்ளதுப் போல் ஒரு மணி நேரம் என்பது ஆயிலைப் பூசி குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஊறவைத்தால் தான் பலனளிக்கும் என்று அர்த்தம்.
ஆகவே தங்களின் செளகரியத்திற்க்கு ஏற்றார்ப்போல் எவ்வளவு நேரமானாலும் ஊறவைக்கலாம்.தினமும் கூட பூசிக்கொள்ளலாம். அதேப்போல் தினமும் ஷாம்பூ போட்டு தலைக்குளிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் வசதிக்கேற்றவாறு தலைக் குளிக்கலாம்.

மேலும் முதலில் தேங்காய் எண்ணெயுடன் இந்த ஆயிலை சரிசமமாக மற்றொரு குப்பியில் கலந்துக் கொண்டு, அதை ஒரு சில வாரம் பயன்படுத்திவிட்டு பிறகு பயமில்லாமல் நேரிடையாக பூசலாம்,ஒகே. நன்றி.

மேலும் சில பதிவுகள்