தூனா மீன் பொடிமாஸ்

தேதி: May 28, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தூனா மீன் டின் - 400 கிராம்
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி துண்டு - 2 இன்ச்
பச்சை மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் டின் மீனை தண்ணீரில்லாமல் வடிகட்டவும். வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும், இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்கவும், பெருஞ்சீரகத்தை கொரகொரப்பாக நுனுக்கி வைக்கவும்.
பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு போடவும்.
சிறிது சிவந்ததும் வெங்காயத்தை போட்டு சிவந்து வரும் தருவாயில் பெருஞ்சீரகத்தை போடவும்.
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி போட்டு கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின்பு தேங்காய் துருவலை போடவும்,
பிறகு சிறிது நேரம் வதக்கிய பின்பு மீனை போட்டு நன்றாக கிளறவும் அதில் அனைத்து மசாலா பொருட்கள் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மசாலா வாசனை போன பிறகு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எப்படி இருக்கீங்க. வீட்டில் அனைவரும் நலமா. உங்க தூனா மீன் பொடிமாஸ் சப்பாத்திக்கு செய்தேன் சுவை அருமையாக இருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நான் நல்லா இருக்கேன்,நீங்கள் மற்றும் வீட்டில் யாவரும் நலமா?உங்கள் பின்னூட்டதிர்க்கு ரொம்ப நன்றிப்பா!!!என்னடாது நம் குறிப்புகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் வந்திருக்கிறதே இந்தவாரம் நம் சமைய்யலை சமைத்து அசத்தலாம் பகுதிக்கு எடுத்துள்ளார்களோஓ என்று உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்பு போய் முகப்பில் பார்க்கும் போது தான் தெரிந்துக்கொண்டேன்.ரொம்ப நன்றிப்பா!!