வதக்கிய பூண்டு துவையல்

தேதி: May 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பூண்டு - 20 பல்
வர மிளகாய் - 10
புளி - சிறிது அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 50 மி.லி


 

ஒரு கடாயில் பாதி எண்ணெயில் மிளகாயை வதக்கி தனியாக எடுக்கவும். பிறகு அதே கடாயில் பூண்டையும் தனியாக வறுக்க வேண்டும்.
பூண்டு நன்கு வெந்து சிவக்க ஆரம்பிக்கும் போது புளியைப் போட்டு சிறிது கிளறி அடுப்பை அணைக்கவும். மூன்றையும் உப்புடன் நைசாக அரைத்து மீதி நல்லெண்ணெய் சேர்க்கவும்.


இது இட்லிக்கு மிக சுவையாக இருக்கவும். இந்தச் சட்னி வாயுத் தொல்லையை நீக்கும். அம்மியில் அரைத்தால் சுவை அதிகம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாக இருந்தது.மிக்க நன்றி சரஸ்வதி மேம்.

சரஸ்வதி,
நேற்று உங்கள் செய்தேன்.விதியாசமாக இருந்தது. பொரித்த 10 மிளகாயையும் போடவில்லை. 5 தான் சேர்த்தேன். நான் காரம் அதிகம் சேர்ப்பதில்லை.
ஸான்ட்விச்சில் வைத்து டோஸ்ட்பண்ணிச் சாப்பிட்டேன்.நன்றாக இருந்தது. இட்லியோடும் நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி சரஸ்வதி.
(நான் பதிவு போடுகிற இடமெல்லாம் மேனகா எனக்கு முன்னால் வந்திருக்கிறார்!!!)
இமா

‍- இமா க்றிஸ்

நிறைய பூண்டை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.உங்கள் குறிப்பு அழகாக கைகொடுத்தது.சுவையாக இருந்தது மிக்க நன்றி.

சுரேஜினி

திருமதி. இமா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த துவையலின் படம்

<img src="files/pictures/vathakiyapoondu.jpg" alt="picture" />

நான் அனுப்பிய படத்தை இங்கு சேர்த்தமைக்காக அட்மினுக்கு எனது நன்றிகள்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்