காசி அல்வா

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூசணிக்காய் - ஒரு துண்டு
தேங்காய் - ஒரு மூடி
பால் - கால் லிட்டர்
சர்க்கரை - 3 கப்
நெய் - 350 கிராம்
முந்திரிப் பருப்பு - 100 கிராம்
வெள்ளரி விதை - ஒரு மேசைக்கரண்டி
சாரப் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

பூசணிக்காயை எடுத்து விதையையும், கொழ கொழ வென்றிருக்கும் பகுதியையும் மற்றும் தோலையும் நீக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
காரட் துருவும் கட்டையை எடுத்து அதில் பூணிக்காயைத் துருவிக் கொள்ளவும்.
சற்று கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை கப் தண்ணீர் விட்டு அதில் பூசணிக்காயைச் சேர்த்து வேக விடவும்.
பூசணிக்காய் நன்றாக வெந்ததும் இறக்கி நீரை வடித்து விடவும். பிறகு பூசணிக்காயில் இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுக்கவும்.
பாலை வெண்கலப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு சுண்ட காய்ச்சி இறக்கி விடவும்.
சுத்தமான வாணலியில் சர்க்கரையைப் போட்டு அரை ஆழாக்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும்.
சர்க்கரை இளம் பாகானதும் வெந்த பூசணிக்காயைப் போட்டுக் கிளறவும். இரண்டும் ஒன்றாக சேர்ந்து இறுகி வரும் சமயத்தில் சுண்டிய பாலைச் சேர்த்து சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கிளறவும்.
பூசணிக்காயும், பாலும், சர்க்கரையையும் ஒன்று சேர்த்து நெய்யாக வரும் வரை அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டேயிருக்கவும்.
கையில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி கலவையை ஒரு நெய் தடவி தட்டில் கொட்டவும்.
இறுதியில் பொடியாக சீவின முந்திரிப் பருப்பு, சாரப் பருப்பு, வெள்ளரி விதை ஆகியவற்றை மேலே தூவவும்.


மேலும் சில குறிப்புகள்