கோழி ரசம்

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு: 6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10 பல்
தக்காளி - 3
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 6 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க: பட்டை - 1, கிராம்பு - 1, அன்னாசிப்பூ - 1
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு


 

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, ஆகியவற்றை வறுத்து மஞ்சள் தூள், 5 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்தவற்றை கோழியில் பிசற வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி, கோழியை போட்டு வதக்கவேண்டும்.
10 நிமிடம் சிறு தீயில் வதக்கி மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு கிளறி 5 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவேண்டும். சாப்பிட மிகச்சுவையானது.


நாட்டுக்கோழிக்குஞ்சில் ரசம் வைத்து சாப்பிட்டால் ஜலதோஷம் உள்ளவர்களுக்கு வேற எந்த மருந்தும் தேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்