ஜெல்லி ஜவ்வரிசி சர்பத்

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு: 15-லிருந்து 20 கப்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா - 1 பாக்கெட் (12 கிராம்)
ஜவ்வரிசி - 200 கிராம்
பால் - 1 லிட்டர்
சீனி - 400 கிராம்
பாண்டான் இலை - 4
ரோஸ் எஸன்ஸ் (பாண்டான் இலை போடாவிட்டால்) - 5 துளிகள்
தண்ணீர் - 3 லிட்டர்
உப்பு - தேவையானஅளவு

பகுதி:1
இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா, தண்ணீர் 1 லிட்டர், சீனி 150 கிராம், உப்பு 1 தே.கரண்டி, பச்சை நிறம்- 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒன்றாக காய்ச்சி உறைய விடவும். உறைந்த பின் ஆக்கரக்காவை துருவிக்கொள்ளவும்.
பகுதி:2
ஜவ்வரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் 1 தே.கரண்டி உப்பு, ஜவ்வரிசி போட்டு வேகவிடவும். (ஜவ்வரிசி நிறம் மாறிவிட்டால் வெந்துவிட்டதை அறியலாம்). வெந்ததும் அதை தண்ணீரில் கழுவி வடிகட்டியால் வடித்துக்கொள்ளவும்.

பகுதி:3
சீனி-250 கிராம்,தண்ணீர்- 1/2 லிட்டர்,பாண்டான்இலை 4,உப்பு 1 தே.கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.(சீனி பாகு)

ஒரு பாத்திரத்தில் துருவிய ஆக்கரக்கா,பால்,ஜவ்வரிசி, தண்ணீர், தேவையான அளவு சீனி பாகு இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து குளிர் பதனப்பெட்டியில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

1: துருவிய ஆக்கரக்கா,ஜவ்வரிசியை குளிர்பதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். ஜவ்வரிசியை கழுவி வைப்பதனால் வீணாகாது.

2:இந்த சீனிப்பாகை நாம் கூடுதலாக செய்து பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். 1 கப் தண்ணீரில் இந்தப்பாகு 1 1/2 மே.கரண்டி விட்டு எலுமிச்சைப்பழம் பிழிந்தால் சர்பத் ரெடி. அதையே 1 கப் பாலில் விட்டு ரோஸ் நிறம் சேர்த்தால் சுவையான ரோஸ் மில்க் ரெடி. நமக்கு விருப்பப்பட்ட பானங்களை தயாரித்துக்கொள்ளலாம். கோடை காலங்களிலும், நோன்பு நேரங்களிலும் பயன்படுத்த சுலபமாக இருக்கும்.

3:பாண்டான் இலையை சமையலுக்கு பயன்படுத்தும் போது எல்லா இலைகளையும் சேர்த்து ஒரு முடிச்சாக போட்டு வைக்கவும். அப்போது தான் சமைத்ததும் தூக்கிப் போட வசதியாக இருக்கும். அது வெறும் வாசனைக்குத்தான்.

4.பாலிற்குப் பதில் evoperated milk சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்

Comments

நலமாக இருக்கிறீர்களா? கோடைக்கு ஏற்றாற்போல் சில்லுன்னு எதாவது சாப்பிடனும் போல இருந்தது அப்போதுதான் அறுசுவை இணையதளத்தில் உங்கள் recipe பார்த்தேன். செய்ய வேண்டும் என்ற குஷியில் இருந்ததேன். ஆனால் இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா என்றால் என்ன? எப்படி இருக்கும்? எங்கு கிடைக்கும்? என்று எனக்குள் கேள்வி எழும்பியது. உடனே இருக்கவே இருக்காங்கம் நம்ம ஜவகர் பானு அவர்கள். அவர்களிடமே கேட்டு விடலாம் என்று தோன்றியது. கேட்டு விட்டேன்.
நன்றி!

நான் நலம், தாங்கள் நலமா? ஆக்கரக்கா பற்றி கேட்டிருந்தீர்கள். கடல் பாசியை தான் ஆக்கரக்கா என்று அழைப்பார்கள். agar agar powder-ஐ தான் இன்ஸ்டண்ட் ஆக்கரக்கா என்று குறிப்பிட்டிருந்தேன். இது உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சியைத் தரும்.இதைப்பற்றி மேலும் தெளிவாக தெரிந்துக்கொள்ள
http://www.arusuvai.com/tamil/forum/no/2020 என்ற பகுதியை பார்வையிடவும்.படத்துடன் உள்ளது. செய்து பார்த்துவிட்டு எத்தனை மார்க் என்று சொல்லவும்.
நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் எப்படி இருக்கிறீர்கள்.... உங்களின் முறைப்படி சர்பத் செய்துபார்த்தேன் நன்றாக இருந்தது நாங்கள் இதே போல கடற்பாசிமட்டும் போட்டு செய்வோம் ஜவ்வரிசி போட்டு புது சுவையாக வெய்யிலுக்கு இதமாக இருந்தது நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

இறைவன் உதவியால் நான் இங்கு நலம். தாங்கள் நலமா? இப்பொழுது தான் தாங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தேன்.மிக்க நன்றி. என்னுடைய முதல் குறிப்பும் இதுவே. பிள்ளைகளுக்கு பள்ளிவிடுமுறை என்பதால் அண்ணணன் வீட்டில் தங்கினார்கள். எனக்கு அங்கும், இங்கும் அலைந்ததில் அறுசுவைப்பக்கம் வர முடியவில்லை.அதனால், பதில் அளிக்க தாமதமாகிவிட்டது. Cornation Milk-ல் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
தந்தையின் இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்று.
நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அவர்களை சந்திப்போம்.இது நிரந்தரபிரிவு அல்ல.
இப்படித்தான் என்னை நான் தேற்றிக்கொன்டேன்.
அவர்களுக்காக நாம் அனுதினமும் துவா செய்வோம்.
வஸ்ஸலாம்.

அன்பு சகோதரி ஜவஹர் பானுவுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றுதான் சபுர் செய்யுங்கள் உங்கள் தாயாருக்கு நீங்கள் தைரியம் சொல்லுங்கள் ..அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப்பொருத்து அவர்களை நல்லடியார் கூட்டத்தில் சேர்க்க நாம் அவர்களுக்காக எப்பொழுதும் துவா செய்வோம்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

வ அலைக்குமுஸ்ஸலாம் பர்வீன் and ஜுலைகா,
தங்கள் இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மறுமையை நம்பும் நமக்கு நிச்சயமாக நிரந்தரப்பிரிவு அல்ல தான்.நானும் துவாச் செய்கிறேன். என் தந்தை விட்டுச் சென்றவைகளில் சிறந்தது அவர்களுக்காகப் பிரார்த்திக்கும் நல்ல பிள்ளைகளே. நன்றி சகோதரிகளே.