தேங்காய்பால் உருளை குருமா

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

உருளைக்கிழங்கு - 3
நறுக்கிய வெங்காயம் - கால் கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பட்டை - சின்ன துண்டு 3
மிளகாய் வற்றல் - 6
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


 

உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காய்த் துருவலை மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றல், சோம்பு, பட்டை போட்டு வதக்கி எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு 30 நொடி வதக்கவும்.
அதன் பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து விட்டு வெங்காயத்துடன் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து அரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
அதில் அரைத்து எடுத்து வைத்திருக்கும் விழுது மற்றும் மஞ்சள் தூள், சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும்.
பிறகு ஒரு நிமிடம் கழித்து கொதித்து நுரைவரும் போது எடுத்து வைத்திருக்கும் பாலை ஊற்றி, 3 நிமிடம் கழித்து கிளறி இறக்கி விடவும். இறக்கிய பிறகு மேலே கொத்தமல்லி தழை தூவவும்.
இந்த தேங்காய் பால் குருமாவை இட்லி, தோசையுடன் பரிமாறவும். சுவையான இந்த குருமாவை மிகக் குறைந்த நேரத்தில் எளிதாகத் தயாரித்துவிடலாம். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வித்யா அவர்கள் இந்த தேங்காய்பால் உருளைக்கிழங்கு குருமாவை செய்து காண்பித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர், விதவிதமாய் புதுவித உணவுகளைச் சமைப்பதில் வல்லவர். தமிழகச் சமையல் மட்டுமல்லாது ஆந்திர, வட இந்திய சமையல் முறைகளும் இவருக்கு அத்துப்படி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்யாசமான குருமா கொடுத்ததற்கு நன்றி. முயற்சிக்கிறேன்.

KEEP SMILING ALWAYS :-)