கடுகு, உளுந்து துவையல்

தேதி: May 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் - 6 (அல்லது) பச்சை மிளகாய் - 5
புளி - சிறிது
கடுகு, உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தை சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மிளகாய், தேங்காய், புளி சேர்த்து வதக்கி உப்பு வைத்து அரைத்து கடைசியில் கடுகு, உளுத்தம் பருப்பைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்