சாம்பார்

தேதி: June 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

பருப்பு - 100 கிராம்
காய்கறி - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சைஅளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 10
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
தாளிக்க:
கடுகு, ஊளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் - 2


 

பருப்பில் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து குக்கரில் 4 விசில் வைக்கவும். பருப்பு வெந்தவுடன் காய்கறி, பாதி வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், சாம்பார் பொடி, உப்புச்சேர்த்து நன்கு வேக விடவேண்டும்.
காய்கள் நன்கு வெந்ததவுடன் புளியைத்தண்ணீரில் கரைத்து சாம்பாரில் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் பெருங்காயம் போட்டு தாளித்து மிளகாய் கிள்ளிப்போட்டு 2 வெங்காயம் நறுக்கிச்சேர்த்து, கறிவேப்பிலை போட்டு வதக்கி சாம்பாரில் கொட்டவும். மிகச்சுவையான சாம்பார் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Romba Nanna Irukku

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
சாம்பார் செய்து பின்னூட்டம் அனுப்பியமயைக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களாக அறுசுவை பார்க்கவே இல்லை. இப்போதுதான் பார்த்தேன். நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

can u say what are products added in the sambar podi?

Archana

நான் கொடுத்திருக்கும் ரெசிப்பியிலேயே சாம்பார் பொடி தயாரிக்கும் குறிப்பு கொடுத்திருக்கிறேன். பார்த்து தயாரிக்கவும். நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

சரஸ்வதி ஆன்டி!!! அடுத்த சமையல் வாரம் உங்களோடது. நானும் எங்கடா காணமேன்னு நினச்சேன்.. அப்ப அப்ப வந்து ஒரு பதிவு போடுங்க..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் சாம்பார் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"