இட்லி சாம்பார்

தேதி: June 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

துவரம் பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 2 தேக்கரண்டி
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 15
புளி - கொட்டைப் பாக்களவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 கொத்து


 

காய்கள், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பச்சைமிளகாய் கீறிக் கொள்ளவேண்டும்.
குக்கரில் பருப்புகள், நறுக்கின காய்கள், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் 4 கிளாஸ் ஊற்றி மூடி 4 விசில் வைக்க வேண்டும்.
பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து ஒரு கரண்டியால் மசித்து கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து பருப்புக்கலவையில் கொட்டி, புளி 1/2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடியைச்சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சுவையான இட்லி சாம்பார் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hi saraswathy,

i tried this dish. it came out very well. thank u.

பண்ணிபார்த்தேன் நன்றாக இருந்தது.நன்றி..

அன்புடன்,
மர்ழியா நூஹு

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

Hello sharmila,
THANKS, your appreciation encourages me.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

hi

Will u please tell me how to make Idly sambar podi?

barathysenthil@gmail.com

hi

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

என்னுடைய ரெசிப்பியில் சாம்பார் பொடி தயாரிப்பது எப்படி என்று கொடுத்துள்ளேன். இட்லி சாம்பாருக்கு என்று தனிப்பொடி இல்லை. சாம்பார்பொடியில்தான் சிறிது சேர்க்கவேண்டும். நன்றி பாரதி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

hi
Thanks a lot. Wish u happy New Year.

Bharathi

hi

hi
Thanks a lot. Wish u happy New Year.

Bharathi

hi

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் இட்லிச்சாம்பார் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"