உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கந்தரப்பம்

 


தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 2 ஆழாக்கு
  • ஊளுந்து - 1/2 ஆழாக்கு
  • வெல்லம் -- 1/4 கிலோ
  • தேங்காய் - 1/2 மூடி
  • எண்ணெய் - 1/2 லிஉப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

  • அரிசியும் உளுந்தையும் ஒன்றாக 1/2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். தேங்காயை திருவிக்கொள்ள வேண்டும். முதலில் கிரைண்டரில் தேங்காயை போட்டு ஆட்டி, பிறகு அரிசியையும்,ஊளுந்தையும் கழுவிப் போட்டு, உப்புச்சேர்த்து மைய ஆட்டிக்கொள்ளவேண்டும். பிறகு வெல்லம் சேர்த்து ஆட்டிக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் ஏந்தலான கரண்டியால் மாவை மொண்டு ஊற்ற வேண்டும். ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவேண்டும்.

குறிப்பு:

மாவு இட்லிமாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.

வழங்கியவர்

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை.


comments
கந்தரப்பம் - அருமை
ஆகஸ்டு 10, 2008 - 11:25pm - வழங்கியவர் DEVA

ஹலோ சரஸ்வதி மேடம், போன வாரம் கந்தரப்பம் செஞ்சேன். ரொம்ப நல்லா இருந்தது. நான் அரிசியை ஊறவைத்து அரைப்பதற்கு பதிலாக அரிசி மாவு 4 கப், உளுந்து ஒரு கப் (ஊறவெச்சு மிக்சியில் அரைச்சுக்கிட்டேன். அதோடு தேங்காயும், வெல்லமும், ஏலக்காயும் போட்டு அரைச்சுட்டேன்)உபயோகித்தேன். அரிசி மாவுடன், மற்ற அரைச்சு வெச்சதைக் கலந்து கந்தரப்பம் செஞ்சேன். நல்லா இருந்தது. ப்ரிட்ஜில் வைக்காமலேயே அடுத்த நாள் காலையில் கூட ரொம்ப நல்லா இருந்தது. சூடா சாப்பிடறதைவிட ஆற வைச்சு, அடுத்த நாள் காலையில் சாப்பிடும்போது ரொம்ப நல்லா இருந்தது. எண்ணெய்யே குடிக்கல. சென்னையில் இது சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த ரெசிப்பி கொடுத்ததுக்கு நன்றி.

HAI DEVA
ஆகஸ்டு 11, 2008 - 1:01am - வழங்கியவர் saraswathi

கந்தரப்பம் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி. ஆஸ்திரேலேயாவில்தான் மாவு புளிக்காது. இப்போது அங்கு கிளைமேட் அப்படி. ஆனால் இந்தியாவில் அப்படி வைக்கமுடியாது. நான் அரிசி மாவில் செய்தது இல்லை. இனி முயன்றுபார்க்கிறேன் அங்கு வரும்போது. ஐடியா கொடுத்ததற்கு நன்றி.
ஆகஸ்ட் 15-ம் தேதி வரலக்ஷ்மி விரதம். அன்று செய்வேன்.