கறி முட்டை வறுவல்

தேதி: June 9, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறி - கால் கிலோ
முட்டை - 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சத்தூள் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
கசகசா - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
தாளிக்க:
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று


 

அரைத்தவற்றை கறியில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, கறியைப்போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
கறியில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் மிளகாய் தூள், மல்லித்தூள் உப்பு போட்டு 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து, சிறு தீயில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.
பிரஷர் அடங்கியவுடன் கறியிலுள்ள தண்ணீரை வற்ற விட்டு, முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள், சிறிது உப்புத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்