தேதி: June 10, 2007
பரிமாறும் அளவு: 8
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய்ப்பொடி - 4 மேசைக்கரண்டி
மல்லிப்பொடி - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
புளி - பெரிய எலுமிச்சை யளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
தாளிக்க:
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை இளஞ்சூட்டில் வறுத்து, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை போட்டு பொரியவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இரண்டாக கீறிய பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
அதில் புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு மிகவும் திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
நன்கு கொதிக்கும்பொழுது மீனை நன்கு கழுவி ஒவ்வொன்றாக குழம்பில் போட்டு கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் மிதந்து வரும்பொழுது அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
Comments
கொஞ்சம் கவனிங்க அட்மின்...
சாதாரணமாய் அடுப்பில் செய்யக்கூடிய இந்த செய்முறை மைக்ரோவேவ் குறிப்புகளில் இடம்பெற்றிருப்பது ஏன்?
இதுபோல் நிறைய
குறிப்பிட்டு காட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி. நிறைய குறிப்புகள் இதுபோல் இடம் மாறி இருக்கின்றன. கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுக்கும் சகோதரிகள் சரியான பிரிவினை தேர்வு செய்து கொடுக்கவேண்டும். சில நேரங்களில் List box ல் செலக்ட் செய்யும்போது தவறுதலாக மாறிவிடுவது உண்டு. இப்போதைக்கு இதை சரி செய்துவிடுகின்றேன். இதுபோல் இடம் மாறி கிடக்கும் ஏராளமான குறிப்புகளையும், எழுத்து பிழைகளுடன் இருக்கும் குறிப்புகளையும் சரி செய்வதற்கென்றே தனியாக ஒருவரை பணியில் நியமிக்கவுள்ளோம். அதன்பிறகு இந்தப் பிரச்சனைகள் சரியாகும் என்று நம்புகின்றோம்.
Really really good :)
Hello Madam,
Today I tried this recipe with TILAPIA fish...It is really gud. The Best thing in this recipe is that we don't use coconut which is high in colestrol.Thanks for this recipe...
best regards,
anupandian
Be the best of what you are and the Best will come to you :)
திருமதி
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
Dear Anupandiyan,
Thanks for your appreciation for my recipe.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
சரஸ்வதி மேடம் மீன் குழம்பு
மீன் குழம்பு இதில் வெங்காயம் 5 சின்னதா பெரியதா?
மசாலா அரை கிலோ விற்கு ரொம்ப அதிகமா இருக்கும் அதும் 4 மேசை கரண்டி என்றால் எப்படி.
இரண்டு தேக்கரண்டி போட்டாலே ரொம்ப காரமாக இருக்கும்..
இது செய்யலாம் என்று பார்த்தால் இதைல் மசலா அதிக மாக இருக்கே?
ஜலீலா
Jaleelakamal
JALILAA
மதுரையிலுள்ள புளி அதிகமாக புளிக்கும். நாட்டுத்தக்காளி போடுவோம். அதுவும் புளிப்பு அதிகம். அதனால் மசாலா சரியாக இருக்கும். சின்ன வெங்காயம்தான் அரைக்க. அதிக டேஸ்டிற்கு சின்னவெங்காயம். நன்கு சமையல் தெரிந்த நீங்களெல்லாம் பார்த்து மசாலா சேர்த்துக்கொள்ளலாமே.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
சரஸ்வதி மேடம் ஒரு வேலை
சரஸ்வதி மேடம் ஒரு வேலை மிளகாய் தூள் அளவு அதிகமாக கொடுத்துவிடீர்களோ என்று தான் கேட்டேன்,.
யார் ரெஸிபி பார்த்தாலும் மசாலா அளவு என் இழ்டம் தான்/
இதில் நான்கு மேசை கரண்டி என்பது அதிகம் தான் 11 டு 12 தேக்கரண்டி வருது அதான் கேட்டேன்.
ஜலீலா
Jaleelakamal
jalilaa
11லிருந்து 12தேக்கரண்டியா வரும். மேஜைக்கரண்டி என்பது டேபுள்ஸ்பூந்தானே. குழப்பமாக இருக்கிறது. யோசிக்க வேண்டியது அவசியம். பிறகுதான் யோசித்து மாற்றவேண்டும்.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
சுவையான மீன் குழம்பு!
சரஸ்வதி மேடம்,
உங்க மீன் குழம்பு நேற்று இரவு டின்னருக்கு செய்தேன். ப்ரெஷா ஸ்பைசஸ் எல்லாம் வறுத்து அரைத்துசெய்தது ரொம்ப சுவையாக இருந்தது. (நான் கூடவே கால் தேக்கரண்டி மிளகும் சேர்த்துக்கொண்டேன்.) முக்கியமா, தேங்காய் சேர்க்காமலேயெ திக்காக குழம்பு செய்ய முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்!. குறிப்புக்கு நன்றி மேடம்.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ