மீன் வறுவல்

தேதி: June 10, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

மீன் - அரை கிலோ
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
பூண்டு - 5 பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது


 

முதலில் மீனை நன்கு கழுவிக் கொள்ளவும். பூண்டு, சோம்பு, கறிவேப்பிலை, தக்காளி, உப்பு ஆகியவற்றை அரைத்து, எலுமிச்சைச்சாறு, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து மீனில் பிசறி 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மீனை 2 [அ] 3 துண்டங்களாக போட்டு, சிறு தீயில் வறுத்து திருப்பிப்போட்டு சிவந்தவுடன் எடுக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hi,u mentioned coriander powder,while marinating fish fry.but u havent given the measurement for it,and chilli powder u said to add 4tablespoon,will it be more spicy or ok.

அன்பு சகோதரி சரஸ்வதி அவர்களுக்கு இந்த வார கூட்டாஞ்சோறு சமையல் குறிப்பில் தேர்வு செய்திருந்த தங்களின் இந்த மீன் வறுவலை இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வாள மீன் கொண்டு செய்தேன். புதினா ரசத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இந்த சுவையான குறிப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி.

வாள மீனுக்கும் புதினாரசமும் சூப்பர்தான்
மனோகரி மேடம் அசத்துராங்க!!

ஹலோ சுபா எப்படி இருக்கீங்க? ஆமாம்.. ஆமாம்.. இந்த டேஸ்ட் காம்பினேஷன் சூப்பராக இருந்தது.நீங்க இன்னும் ஆரம்பிக்க வில்லையா. பரவாயில்லை எப்பொழுது முடியுமோ அப்பொழுதே செய்து பாருங்கள்.ஆனால் மறக்காமல் அதன் பின்னூட்டதை அனுப்பி விடுங்கள். மீண்டும் மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் எனது டேஸ்டை பற்றி கருத்து தெரித்ததற்கு மிக்க நன்றி டியர்.

இந்த வறுவலை வெளவ்வாள் மீன் கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது