மீன் தேங்காய்ப்பால் கூட்டு

தேதி: June 10, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் (விரால் மீன் (அ) வஞ்சிர மீன்) - அரை கிலோ
தேங்காய்ப்பால் - ஒரு கிளாஸ்
மிளகாய் தூள் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
வினிகர் [அல்லது] எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 150 கிராம்


 

மீனை நன்கு கழுவி அரை தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசறி 1, 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும்.
100 கிராம் எண்ணெயை வாணலியில் விட்டு மீனை 2 அல்லது 3 துண்டங்களை போட்டு சிறு தீயில் பாதியளவு (எல்லா மீனையும்) வேகவைத்து எடுக்க வேண்டும்.
வேறொரு கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி, சோம்பு, சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை அரைத்து எண்ணெயில் ஊற்றி கொதிக்கவிட்டு, உப்பு, தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன், மீன் துண்டங்களை போட்டு திக்கான கூட்டாக வரும்போது அடுப்பை அணைக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்