முட்டை மிளகு வறுவல்

தேதி: June 10, 2007

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

முட்டை - 4
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

ஒரு கடாயில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி முட்டையை போட்டு நன்கு வேகவிட வேண்டும்.
முட்டை வெந்தவுடன் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு இரண்டாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, முட்டையின் மஞ்சள் கரு எண்ணெயில் படும்படி அடுக்க வேண்டும்.
பிறகு திருப்பிபோட்டு மசாலா முட்டையில் ஒட்டியவுடன் அடுப்பை அணைத்து விடவேண்டும்.


சிறு தீயில் வறுக்க வேண்டும். பொடிகள் எதுவும் கருக கூடாது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள சரஸ்வதி மேடம்
நேத்து உங்கள் மிளகு முட்டை வறுவல் செய்தேன்.மிகவும் டேஸ்டியாக இருந்தது.மிகவும் நன்றி மேடம்.என்னிடம் இருக்கும் இட்லி பொடி தீர்ந்ததும் உங்கள் இட்லி பொடி செய்து பார்க்கிரேன்.

அன்புடன் பர்வீன்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

முட்டை மிளகு வறுவல் செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி. இட்லி பொடி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று தெரிவிக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

முட்டை மிளகு வறுவல் செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி. இட்லி பொடி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று தெரிவிக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

முட்டை மிளகு வறுவல் செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி. இட்லி பொடி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று தெரிவிக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

முட்டை மிளகு வறுவல் செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி. இட்லி பொடி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று தெரிவிக்கவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

உங்க குறிப்பை நான் இன்னக்கி செய்தேன் மேடம். சூப்பர் டேஸ்ட் மேடம். எனக்கு மிளகு டேஸ்ட் எப்போதுமே பிடிக்கும் இதுல ரொம்ப நல்லா இருந்துச்சு மேடம் நன்றி மேடம். செல்வி மேடமோட ப்ரைட் ரைஸ்ஸுடன் சாப்பிட்டோம் மேடம் நல்ல காம்பினேசனா இருந்துச்சு

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
மிளகு வறுவல் செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியமைக்கு நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

என்ன சரஸ்வதி மேடம் ரொம்ப நாளா ஆளையேக்கணும் ஊருக்கு போய் விடீர்கள?
நல்ல இருக்கிரீர்களா?
பிள்ளைகள் நல்ல இருகிறார்களா?
ஜலீலா

Jaleelakamal

சரஸ்வதி மேடம்
இன்னைக்கு முட்டை மிளகு வறுவல் செய்தேன் நன்றாக இருந்தது,நன்றி மேடம்.

மார்ச் 18ல் தாங்கள் அனுப்பிய பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன். மார்ச்மாதம் மாமியார் ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். பிறகு செப்டம்பரில் இறந்து விட்டார்கள். இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். பிள்ளைகள் நன்றாக இருக்க்கிறார்கள். தாங்கள் நன்றாக இருக்கிறீர்களா. நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி. இமா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த முட்டை வறுவலின் படம்

<img src="files/pictures/egg_milagu.jpg" alt="picture" />

முட்டை மிளகு வறுவல் படம் சூப்பர். ரவைதோசைக்கு இன்னும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து மிக லேசாக ஊற்றி முருகலனவுடன் திருப்பி முருகவிட்டு எடுக்கவேண்டும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

நன்றி அட்மின் & சரஸ்வதி.
சரஸ்வதி, முட்டை வறுவல் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. தோசை பற்றிய தகவலுக்கு நன்றி. நான் செய்தது முறுகலாக வரவில்லைதான். ஆனால் சுவை நன்றாக இருந்தது. அடுத்தமுறை நீங்கள் சொன்ன மாதிரிச் செய்கிறேன்.
அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் சரஸ்வதி மேடம் முட்டை மிளகு வறுவல் செய்தேன்.செய்ரதுக்கு ஈசியா இருந்தது.. சுவையும் அருமை..நன்றி மேடம்..

அன்புடன்
ஷராபுபதி

சரஸ்வதி, நேற்று உங்கள் முட்டை மிளகு வறுவல் செய்தேன்.மிக நன்றாக இருந்தது. குறிப்புக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் முட்டை மிளகு வறுவல் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"