உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முட்டை குருமா

 


தேவையானப் பொருட்கள்

  • முட்டை - 6
  • வெங்காயம் - 100கி
  • தக்காளி - 5
  • பச்சைமிளகாய் - 5
  • இஞ்சி,பூண்டு விழுது - 2மேஜைக்கரண்டி
  • தேங்காய் - 1 மூடி
  • பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
  • முந்திரி - 5
  • ஏலக்காய் - 3
  • பட்டை - 2
  • கிராம்பு - 1
  • அன்னாசிப்பூ - 2
  • சோம்பு - 1தேக்கரண்டி
  • கசகசா - 1தேக்கரண்டி
  • தாளிக்க;
  • சோம்பு - 1/2தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  • இலை - சிறிது
  • மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1மேஜைக்கரண்டி
  • மஞ்சத்தூள் - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3மேஜைக்கரண்டி
  • உப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை

  • தேங்காய், மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, சோம்பு, ஏலக்காய் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கசகசா ஆகியவற்றை நன்கு அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம், தக்களி, இஞ்சிபூண்டு விழுது ஆகியவற்றை போட்டு வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், ம.தூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி முட்டையை போட்டு வேக விடவேண்டும். நன்கு வெந்தவுடன் தண்ணீரில் போட்டு ஓட்டை நீக்கிக்கொள்ள் வேண்டும். பிறகு அரைத்தவற்றை குழம்பில் கொட்டி, வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கொதிக்கவிட்டு முட்டையை போட்டு பச்சை வாசனை போய் குருமா திக்கானவுடன் இறக்க வேண்டும்.

வழங்கியவர்

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 30 minutes 45minutes
  random food image


comments