முட்டையும் காலிஃப்ளவரும்

தேதி: June 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4
காலிஃப்ளவர் - ஒன்று
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கவும்.
காலிஃப்ளவரை கொதிக்கும் வெந்நீரில் போட்டு பிழிந்து வதக்கிய வெங்காயத்தில் போட்டு வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட வேண்டும்.
வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

How r u.your receip is very super.