உருண்டைப் பணியாரம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு படி
தேங்காய் - ஒன்று
நாட்டுச் சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 4
எண்ணெய் - தேவைகேற்ப


 

பச்சரிசியை தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து விடவும்.
மறுநாள் எடுத்து தண்ணீரை வடிக்கட்டி அரிசியை சிறிது நேரம் உலர்த்தி மிஷினில் கொடுத்து இடித்து விட்டு சலித்துக் கொள்ளவும்.
தேங்காய் மூடியை கழுவி விட்டு பூவாகத் துருவவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை, ஏலக்காய், தண்ணீர் சேர்த்து கெட்டியாக உருட்டும் பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
மாவைச் சிறிது, சிறிதாக சீடையை போல உருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து உருண்டையை எண்ணெயில் போட்டு நன்கு சிவக்கும் அளவுக்கு இல்லாமல் பொன்நிறமாக பொரித்து எடுக்கவும்.


எண்ணெயை விரலில் தொட்டுக் கொண்டு உருட்டினால் கையில் ஒட்டாமல் வரும்.

மேலும் சில குறிப்புகள்