கத்தரிக்காய் மிளகு வறுவல்

தேதி: June 13, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 10 (சிறியது)
மிளகாய் வற்றல் - 4
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடுகு, ஊளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி


 

கத்தரிக்காயை பொடியாக நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கத்தரிக்காயுடன் மஞ்சள் தூள், உப்புச்சேர்த்து வேகவிட வேண்டும்.
சீக்கிரம் வெந்துவிடும். பிறகு வடிகட்டியில் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், மிளகாய் கிள்ளிப்போட்டு நன்கு வதக்கி, கத்தரிக்காயை கொட்டி மிளகுத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவேண்டும்.


மேலும் சில குறிப்புகள்