முருங்கைக்காய் பொரியல்

தேதி: June 13, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
வரமிளகாய் - 6
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

முருங்கைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி முருங்கைக்காயைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட வேண்டும். மிளகாயும், சீரகத்தையும் மைய அரைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அதில் அரைத்தவற்றையும், மஞ்சள் தூளும் சேர்த்து 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.
தண்ணீர் வற்றி வரும்போது வெந்த முருங்கைக்காய் தண்ணீரை வடித்துவிட்டு போட்டு குறைந்த தீயில் நன்கு கிளறி, மசாலா முழுவதும் காயில் ஒட்டியவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்