idly

ennakku idly sariyaga varavillay,
naan royal chef thanjavur ponni rice use paannraen
dosai ok
tell me please

ஹலோ ஜாஸ்மின் எப்படி இருக்கின்றீர்கள்? இட்லி சரியாக வரவில்லை என்று எழுதியுள்ளீர்கள். பதத்தை குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும். பரவாயில்லை நீங்கள் பயன்படுத்தும் பொன்னி அரிசி 2 கோப்பை, பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி 2 கோப்பை, ஒரு கோப்பை உளுத்தம்பருப்பு, ஒரு தேக்கரண்டி வெந்தையம்,ஆகியவற்றை ஊறவைத்து அரைத்து இரவு முழுவதும் நன்கு புளிக்க வைத்து செய்துப் பாருங்கள். விருப்பபட்டால் ஒரு சிட்டிகை ஆப்பச் சோடாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அல்லது 3கோப்பை பொன்னி அரிசி, 1கோப்பை பச்சரிசி அல்லது பாசுமதி, 1கோப்பை உளுந்து, 1தேக்கரண்டி வெந்தையம் ஆகியவற்றை சேர்த்து செய்துப் பாருங்கள். இந்த இரண்டு அளவுகளிலும் செய்துப் பார்த்து எப்படி வந்தது என்று எனக்கு தெரியப்படுத்துங்கள் நன்றி.

hi manohari
very very thanks for ur reply,
i will try this soon send u the result
thanks
thanks
jasmin

hello friend
one of my best way for making idly is
4 cup of idly rice and 1 cup of splitted uruddal seperatel soak overnight with little fenugrek .
grind urud dal tremove and grind rice only for 8 min in grinder .it will be coursly grinded now mix both the batter add salt and let it ferment .
this mavu will be very nice to make idly and dosai .

hi bhuvaneshveri
thanks for ur reply
jasmin

hi manohari
idly comes very well
but dosai not good
dosai comes very soft,my husband like crispy dosai
what can i do
jas

தோசைக்கு
ஐந்து கப் - பச்சரிசி
ஒரு கப் - உளுத்தம் பருப்பு
ஒரு கைப்பிடி - துவரம் பருப்பு (a) பயித்தம் பருப்பு
இரண்டு தேக்கரண்டி - வெந்தியம்
அரை தேக்கரண்டி - சர்க்கரை

இப்படி அரைத்து முயற்சிக்கவும்.
மொரு மொரு தோசை கிடைக்கும்

நன்றி...

நன்றி...

ஹலோ ஜாஸ்மின் எப்படி இருக்கீங்க.தங்களுடைய முயற்சியில் இட்லி சரியாக வந்துள்ளதைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. இனி தோசைக்கு பிரச்சனை இல்லை. திருமதி வாணி அவர்கள் கூறியிருப்பதுப் போலவும் செய்யலாம். அல்லது பொன்னி அரிசியில் செய்ய வேண்டுமென்றால் பொன்னி அரிசி மூன்றரை கோப்பை,பச்சரிசி அரை கோப்பை, உளுந்து அரைக்கோப்பை, வெந்தையம் ஒரு தேக்கரண்டி ஆகியவற்றை மொத்தமாக ஊறவைத்து மைய்ய அரைத்து செய்துப் பாருங்கள். உளுந்தைப் பொருத்து தான் அதன் மொரு மொருப்பு கிடைக்கும்,நன்றி.

hi manohari
thanks
thanks for ur reply
i will try
jas

hi manohari
how r u?
please help me how to make filter coffee like saravana bhavan coffee
i have filter and narasus coffee powder
thanks

மல்லிகையே

காப்பிப்பொடியை பில்டரில் போட்டு (3 ஸ்பூனுக்கு 4- 5 காப்பி, தயாரிக்கலாம்), கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடி வைக்கவும்.
சிறிது நேரத்தில் கீழே உள்ள பாத்திரத்தில் டிகாக்க்ஷன் இறங்கி இருக்கும்.
ஒரு தம்ளரில் 1 - 2 டீஸ்பூன் (அவரவர் தேவைக்கேற்ப) சர்க்கரை போட்டு, சிறிது டிகாக்ஷன் விட்டு காய்ச்சிய பாலை ஊற்றி ஆற்றி குடிக்கவும்.
முக்கியமான விஷயம் - காப்பியைக் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடக் கூடாது. அப்படி செய்தால் ஒரிஜினல் டேஸ்ட் இருக்காது.
என்ன காப்பிப்பொடி - என்ன காம்பினேஷனில் வாங்குகிறீர்கள் என்று சொல்லுங்கள்.
நான் வாங்குவது
150 பீபெரி - 150 ப்ளான்டேஷன் 'ஏ' (தேவையானால் மினிமம் சிக்கிரி சேர்த்துக் கொள்ளலாம்).
அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்