மைக்ரோ அவன் பால்கோவா

தேதி: June 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

கன்டென்ஸ்ட் மில்க் டின் - 400 கிராம்
பால் பவுடர் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 80 கிராம் அல்லது நெய்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் பால் டின்னை திறந்து மைக்ரோ அவனுக்கு ஏதுவான கண்ணாடி கோப்பையில் பாலை ஊற்றவும்
பிறகு பட்டரை மைக்ரோ அவனில் லேசாக உருக்கி பாலில் சேர்க்கவும்,
பின்பு தயிர், பால் பவுடரை சிறிது சிறிதாக அதில் விட்டு ஒரு கரண்டியால் கட்டி இல்லாமல் கிளறவும்.
பின்பு மைக்ரோ அவனில் 8 நிமிடங்கள் வேகத்தில் செட் செய்யவும், பிறகு 3 நிமிடங்களில் வெளியே எடுத்து நன்றாக கிளறவும்,
மீண்டும் அவனில் வைத்து 3 நிமிடங்களில் வெளியே எடுத்து கிளறி மீண்டும் அவனில் வைத்து மீதமுள்ள நிமிடம் முடிந்து வெளியே எடுத்து கிளறி விடவும்.
இப்பொழுது லேசாகசிவந்து கடை பால்கோவா நிறத்துடன் காணப்படும். இப்பொழுது சுவையான பால் கோவா தயார்.


செய்வதற்கு ரொம்பவும் சுலபமானது சுவையில் கடையில் கிடைக்கும் பால்கோவாக்களுக்கு குறைவில்லாதது, வெளிநாட்டில் வசிப்போருக்கு அடிக்கடி கிடைக்காத இந்த பால்கோவா, நினைத்தவுடன் 10 நிமிடத்தில் சுவையாக தயாரிக்கலாம். அவரவர் மைக்ரோஅவனின் திறனுக்கு ஏற்றாற்போல் நிமிடத்தை கூட்டிக் கொள்ளலாம். அதிகம் போனால் 10 அல்லது 12 நிமிடம் என்னுடைய மைக்ரோ அவனில் 8 நிமிடங்களில் அழகான கலருடன் கிடைத்து விடுகிறது. (பட்டருக்கு பதில் நெய்யும் சேர்க்கலாம்)

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று இந்த பால்கோவா செய்தேன், ரொம்ப அருமையா வ ந்தது, மிக்க நன்றி

அன்புடன் அபி

என் பெரிய பையனுக்கு பால்கோவா என்றால் மிகவும் பிடிக்கும் (இந்தியா போயிட்டு வந்ததன் தாக்கம் ....ஏன்னா எங்க ஊரில் பால்கோவா famous) . திடீரென்று 2 நாள் முன்பு பால்கோவா வேண்டுமென்று ஒரே அழுகை. அறுசுவையில் தேடி பார்த்த போது இந்த ரெசிப்பி கிடைத்தது. என் கணவரும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். பயந்து கொண்டெ செய்தோம்.மிகவும் நன்றாக வந்தது. இனி அடிக்கடி செய்வேன். போட்டோ எடுப்பதற்குள் தீர்ந்துவிட்டது. என் கணவர் எங்க ஊரில் கிடைக்கும் பால்கோவாவை விட நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

இவ்வளவு ஈஸியா சுவையான பால்கோவா செய்ய முடியுமா என்ற சந்தேகத்துடன் தான் செய்தேன்.....கண்டிப்பா உங்களின் குறிப்பு என்னை ஏமாற்றவில்லை. சுவை இன்னமும் நாவில் அப்படியே இருக்கு. எனக்கு இங்கு மில்க்மைடு கிடைக்காததால் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்து செய்தேன். நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே.....என் மைக்ரோவேவில் 12 நிமிடம் ஆனது. இந்த குறிப்பை எங்களுடன் பகிர்த்து எங்களின் தீபாவளியை இனிமையாக்கியதர்க்கு வாழ்த்துக்கள்.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஊருக்கு போவதால் பிஸியாக இருக்கு.வந்தபின்பு கட்டாயம் செய்துபார்த்து சொல்கிறேன்.

நலமாக இருக்கிறீர்களா?நானும் இந்தியா செல்லும் அவசரத்தில் தான் இந்த எளிதான குறிப்பை குடுத்தேன்(படத்துடன் குடுக்க தான் ஆசை நேரமில்லைல்லை,பார்ப்போம் முடிந்தால் பிறகு படத்துடன் குடுக்க முயற்ச்சிக்கிறேன்),திரும்பியவுடன் செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் .உங்கள் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள் !எங்களுக்கும் துவா செய்யுங்கள்! நன்றி!

ரஸியா அவர்களுக்கு,
பால்க்கோவா செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.முதலில் மைக்ரொவேவ் பிளாஸ்டிக்கில் 8 நிமிடங்கள் செட் பண்ணுனேன் இறக்கும்போது பதம் சரியாக இருந்தது நேரம் ஆக சாக்லெட் போல் ஆகி விட்டது. இரண்டாவது தரம் (corelle bowl)செய்தேன் 5 நிமிடங்கள் செட் பண்ணுனேன் சூப்பராக வந்தது. நன்றி உங்களுக்கு

அன்புடன்
அபிராஜன்

நலமா?பால்க்கோவா செய்து பின்னூட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!அவரவர் மைக்ரோ அவென் வேகத்திர்க்கு தகுந்தார்ப்போல் நிமிடத்தை கூட்டவோ,குறைத்தோ செட் பன்னலாம்!

அன்புள்ள ரசியா அஸ்ஸலாமு அலைக்கும்.
பால்கோவாவை ஒரு வாரம் முன்பே செய்துவிட்டேன்.உங்களுக்கு பதில் அளிக்க முடியாமல் போய்விட்டது.நல்லா தின்னோமே இன்னும் நன்றி சொல்லாமல் இருக்கோமேன்னு மனசு உறுத்துச்சு..
எப்போதும் செய்து பார்த்தவுடன் பின்னொட்டம் அனுப்பிவிடுவேன்.

பால்கோவா மட்டும் தாமதமாகிவிட்டது.
மிகவும் நன்றாக வந்தது.மில்க்மெட் என்பதால் மிகவும் இன்னிப்பு சுவை திகட்டுவது போல இருந்துச்சு பின்பு மீண்டும் பால் பவுடர் அதிகமாக மிக்ஸ் செய்தேன்.அப்புரம் இனிப்பு நார்மலுக்கு வந்தது.
மிகவும் நன்றி.மிக இலகுவான பால்கோவாவை கஷ்ட்டப்பட்டு அடுப்புல வச்சு கிண்டி செய்தொனேன்னு நினச்சுகிட்டாங்க எங்க வீட்டில.செய்த முறை சொல்லியதும் என் கணவருக்கு அச்சிரியம்.எல்லா பாராட்டும் உங்களுக்கே.

ஹலோ ரஸியா,
இந்த பால்கோவாவினை துண்டு துண்டாக வெட்டி எடுக்கலாமா? அல்லது ஹல்வாபோல ஸ்பூனால் அள்ளி சாப்பிட வேண்டுமா? எங்களூரில் பால்கோவா என்று சதுர கட்டி போல(பர்பி போல) கடைகளில் விற்பார்கள். அதுதான் கேட்டேன்.
-நர்மதா :)

அஸ்ஸலாமு அலைக்கும் ஃபர்வீன் பானு,
நலமாக இருக்கீங்களா?பால்கோவாவை சொன்னபடி செய்து பார்த்து பின்னோட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!

அன்புள்ள நர்மதா
இந்த பால்க்கோவாவை அல்வாவைப்போல் ஸ்பூனால் எடுத்து சாப்பிடலாம்,எங்கள் ஊர் பக்கம் இப்படி தான் செய்வார்கள்,பால் பேடா,மில்க் ஸ்வீட் தான் துண்டங்கள் போட்டும் அச்சில் வைத்தும் விற்ப்பனை செய்வார்கள்.

மிகவும் நன்றி ரஸியா, எனக்கு இன்னமும் எப்படி அந்த பால்கோவா பதம் என்று தெரியவில்லை. அந்த texture எப்படி இருக்கும்? உதிர் உதிராவா அல்லது களி மாதிரியா? என்னிடம் டின்மில்க் உள்ளது அதுதான் செய்து பார்க்கலாம் என்று நினைத்தேன்.
-நர்மதா :)

அன்புள்ள நர்மதா
இந்த லின்க்கில் போய் பாருங்களேன் உங்களுக்கு புரியும். http://www.arusuvai.com/tamil/node/2675

மிகவும் நன்றி கதீஜா. நான் நேற்று சிறிய அளவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. சுவையும் நன்றாக இருந்தது. ஆனால் நான் சிறிது இறுக விட்டு உதிர் உதிராக எடுத்தேன்.
-நர்மதா :)

உங்க பால்கோவா இன்று செய்தேன்.மிகவும் எளிமையா அபாரமான சுவையில் அசத்தியது.என் கணவரின் பாராட்டும் கிடைத்தது.நான் கஷ்ட்டப்பட்டு செய்தேனு நினைச்சிட்டார்.செய்முறை சொன்னதும் ஆச்சர்யப்பட்டார்.இவ்வளவு சுலபமா செய்ய முடியுமானு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

எப்படி இருக்கீங்க?உங்கள் செல்ல மகள் எப்படி இருக்கிறார்?இப்பொழுது நடக்க ஆரம்பித்து இருப்பாங்க?பால்கோவா செய்து உங்கள் கணவரை அசத்திட்டீங்களா?பாராட்டுக்கள்!செய்து பார்த்து பின்னூட்டம் அனுபியதர்க்கு ரொம்ப நன்றிமா!!

dear rashiya
today only i registered inthe Arusuvai.com
my first receipe is milk gova. excellent. it came out well. thank you
sripushpaa Ramachandran

அன்புள்ள புஷ்பா
நலமா,புதிதாக அருசுவைய்யில் இணைந்திருக்கும் உங்கள் வரவு நல்வரவாகட்டும்!மேலும் முதலாவதாக எனது குறிப்பை செய்து நன்றாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி!உங்களின் பின்னோட்டம் எனக்கும் மகிழ்ச்சியை தருகிறது!மிக்க நன்றி!
அன்புடன்
ரஸியா

சுகமா இருக்கீங்களா? மேடம் எங்க வீட்ல இப்பதான் அவன் வாங்கி இருக்கோம் அதனால் முதல்ல சுவீட் செய்யனும்னு உங்க பால் கோவா தான் நான் செய்தேன் சூப்பர் டேஸ்ட் எங்க அவன்லயும் 8 நிமிடம்துல ஆகிடுச்சு மேடம் ரொம்ப நல்லா வந்துருந்துச்சு. போட்டோ எடுத்து அனுப்பலாம்னு அட்மின் சொல்லி இருந்தாரு சரி அனுப்பலான்மு பார்த்தா எல்லாமே உடனே காலிஆகிட்டு மேடம். ரொம்ப நன்றி மேடம்

நான் நலமே,நீங்கள் நலமா?புதிதாக வாங்கிய அவனில் பால்கோவா செய்து சாப்பிட்டதாக தெரிவித்திருந்தீர்கள்,சுலபமாக செய்வதர்க்கு இந்த குறிப்பை வழங்கியதில் எனக்கும் மகிழ்ச்சி!செய்து பார்த்து பினூட்டம் அனுப்பிதர்க்கு எனதன்பான நன்றிகள்.
அன்புடன்
ரஸியா

kothai..nan chennai varan. neenga yenga irukinga.. kewlfrend@yahoo.com mail pannunga..mudinja santhipom..

hi pushpa..vanga vanga. yenna panringa neenga.. housewife or working..kewlfrend@yahoo.com add pannikong unga address book la..

அன்பு ரஸியா

1.பால் பவுடர் இல்லை என்றால் என்ன செய்வது?

2.மைக்ரோ அவன் சூடு ஹைய்யில் 8 நிமி அல்லது மிடீயம்

Think Positively U will achieve everything
mahapragas, china

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

சகோதரி மகாலஷ்மி
நலமா,8 நிமிடம் ஹைய்யில் தான் செட் பண்ணனும், மேலும் பால் பவுடர் இல்லாமல் செய்யலாம்,ஆனால் அதிகம் தித்திப்பாக இருக்கும்,உங்களுக்கு பிடித்திருந்தால் செய்து பாருங்களேன்.
அன்புடன்
ரஸியா

அன்பு ரஸியா

1.மிகவும் நன்றி,கேட்ட கேள்விகளுக்கு பதில் தந்தமைக்கு நன்றி.உங்கள் பால் கோவாவை ஒரு முறை கண்டிப்பாக செய்து பார்த்து பதில் தருகிறேன்.

2.ஒரு சின்ன வேண்டுகோள் எனது பெயர் மஹாலஷ்மிபிரகதீஸ்வரன் ,(பிராகாஷ் அல்ல) இதை கூறியதால் என்னை தவறாக எண்ண வேண்டாம்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ், China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அன்பு ரஸியா அவர்களுக்கு

1.நான் நேற்று உங்கள் பால்கோவாவை செய்து பார்த்தேன், மிகவும் நன்றாக வந்தது.

2.நான் முதலில் கொஞ்சமாக செய்து பார்கலாமே என்று நீங்கள் கொடுத்த அளவின் பாதி தான் செய்தேன். 4 நிமிடம் தான் பால்கோவா ரெடி, எதிர் பார்கவேயில்லை ரொம்ப நல்ல வந்தது

3.என்னிடம் பால்பவுடர் இல்லை அதனால் அதை சேர்க்கவில்லை நீங்கள் கூறியது போல் இனிப்பு கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது ஆனாலும் நன்றாகவே இருந்தது.

4.எனது கணவர் அதிகம் இனிப்பு விரும்பமாட்டார்,நேற்று அவரே பாதியும் சாப்பிட்டுவிட்டார்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

அன்புள்ள மஹாலஷ்மி ப்ரகதீஷ்வரன்(சரியா சொல்லிட்டேனா?)நலமாக இருக்கீங்களா?பால்கோவா நன்றாக வந்ததாக தெரிவித்திருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி!மேலும் செய்து பார்த்து பின்னோட்டம் அனுப்பியதர்க்கு மிக்க நன்றி!
என்றும் அன்புடன்
ரஸியா

இன்று என்னவரின் பிறந்தநாளுக்கு மைக்ரோவேவ் பால்கோவா செய்தேன் ரொம்ப நல்லா வந்தது.நான் எப்பொழுதும் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சி செய்வோமே அப்படி தான் செய்வேன்.இன்று தான் முதல் முறையாக கன்டன்ஸ்ட் மில்கில் டிரை பண்ணினேன்.சுவையில் எந்த வித்யாசமும் தெரியவில்லை.என்னவர் நான் எப்பொழுதும் செய்வது போல செய்தேன் என்று நினைத்திருந்தார் நான் சொன்ன பிறகு தான் அவருக்கு தெரிந்தது.ரொம்ப நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் இந்த முறையில் அடுப்பில் வைத்து கிண்டி செய்யலாமா?ஏனென்றால் ஊரில் எங்கள் வீட்டில் மைக்ரோவேவ் இல்லை அதனால் தான் கேட்டேன்.
அன்புடன் பிரதீபா

நலமாக இருக்கிறீர்களா?உங்களவரின் பிறந்தநாளுக்கு பால்கோவா செய்துகொடுத்து அசத்திவிட்டீர்கள்!உங்களுக்கு நன்றாகவந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!அப்புறம் உங்களவரின் பிறந்தநாள் இன்றா?அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இன்று உங்கள் கணவரின் பிறந்தநாள் என்றால் நமக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது!அப்புறம் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியை தந்தது!நன்றி... நன்றி...

ரஸியா நான் நலம் நீங்க?அப்பறம் என்ன ஒற்றுமை என்றே சொல்லவில்லை நீங்க?இன்னும் ஒன்று இதே முறையில் பால்கோவா(கன்டன்ஸ்ட்மில்க்,பால் பவுடர் சேர்த்து) அடுப்பில் வைத்து செய்யலாமா?
அன்புடன் பிரதீபா

deepa india vara plan iruka..nan india poran..kewlfrend@yahoo.com mail pannunga

எப்படி இருக்கீங்க?உடன் பதில் அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்,அப்புறம் நான் அடுப்பில் இதுவரை செய்தது இல்லை ஒருமுறை உங்களுக்காக முயர்ச்சித்து பார்க்கனும்!மேலும் என்ன ஒற்றுமை என்று கேட்டிருந்தீர்கள் என் கணவரின் பிறந்தநாளும் அன்று தான்!லேட்டா பதில் தருவதர்க்கு மன்னிக்கனும்!

Muthal murayaaga paal kova seithoom. Roomba nalla irunthathu. Ethai ezhuthiyavarukku mikka nandri. Rasithu rusithoom.
Nandrigal pala..........
Subha saro

பால் கோவாவை செய்து பார்த்து நன்றாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி!செய்து பார்த்து சுவைத்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி!
என்றும் அன்புடன்
ரஸியா

நான் போனில் சொன்ன அன்று செய்யவில்லை வியாழந்தான் செய்தேன் ரொம்ப சூப்பராக இருந்தது போட்டோவும் எடுத்து இருக்கிறேன் அட்மினுக்கு அனுப்பிவைக்கிறேன் ரொம்ப நன்றி ரஸியா இந்த குறிப்பு எங்களுக்கு கொடுத்ததற்கு...

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

எப்படி இருக்கீங்க?ரொம்ப நன்றிமா!லேட்டா சொல்கிறேன்!இங்குள்ள சூழ்நிலை உங்களுக்கு தெரியும்,அதனால் கோபிக்கமாட்டீர்கள்!

அன்பு ரஸியா நீயும், பிள்ளைகளும் நலமா? இந்த வாரம் உன்னுடைய சமையல் குறிப்புகளை செய்வது எனக்கு மிக்க மகிழ்ச்சி. உன்னுடைய ஸ்பெஷலான இப் பால்கோவாவை இந்த வாரம் எப்படி செய்யாமல் விடுவது:) இன்று செய்தேன். நன்றாக வந்தது. கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் செய்தேன். சுவையும் நன்றாக இருந்தது

இங்கு எல்லோறும் நல்லா இருக்கோம்,நீங்க மற்றூம் வீட்டில் யாவரும் நலமா?இந்தவாரம் எனது சமையலை செய்வது எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!பால்கோவா நல்லா வந்ததில் எனக்கும் சந்தோஷம்!