செய்முறை
- கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். தேங்காப்பூவில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து மைய்ய அரைத்து திக்கான பாலாக வடித்து வைக்கவும்.
- வெங்காயம், தக்காளியை நீளவாக்கிலும், பச்சைமிளகாயில் நான்கை மெல்லியதாகவும் நறுக்கி வைக்கவும்.பூண்டை ஒன்ரும் பாதியுமாக நசுக்கி வைக்கவும்.
- ஊறிய பருப்பில் ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு பச்சைமிளகாய், அரைத்தேக்கரண்டி உப்பையும் சேர்த்து வடைக்கு அரைப்பதைப் போல் கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு அரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து, நன்கு ஆறிய பின்பு கட்டியும் தட்டியுமாக உதிர்த்துக் கொள்ளவும்.
- பிறகு சட்டியில் எண்ணெயைக் காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரிந்தவுடன் சோம்பு மற்றுமுள்ள, வாசனைப் பொருட்களைப் போடவும். தொடர்ந்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.அதைத் தொடர்ந்து தக்காளி, நறுக்கிய பச்சைமிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்.
- பிறகு தக்காளி நன்கு கரைந்தவுடன் மிளகாய்த்தூள்,மஞ்சத்தூள், உப்புத்தூளைப் போட்டு நன்கு வதக்கி, தேங்காப் பால், மற்றும் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கொதித்து கெட்டியானவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பை போட்டு கிளறி அரைகோப்பை நீரைச் சேர்த்து கலக்கிவிடவும்.
- பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலாக தூவிவிட்டு குறைந்த அனலில் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.
- இந்த சுவையான வடகறியை இட்லி அல்லது தோசையுடன் சூடாக பரிமாறவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
25 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 58 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 50 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -