உளுந்து அல்கா பணியாரம்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம்பருப்பு - கால் கிலோ
சீனி - ஒரு கப்
தேங்காய் துருவல் - 2 கப்
ஏலக்காய் - 3
எண்ணெய் - அரை லிட்டர்
உப்பு - தேவைகேற்ப


 

உளுந்தை சில மணி நேரம் ஊர வைத்து கழுவி வடைக்கு அரைப்பதைப் போல கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
தேங்காயை துருவி அதை அரைத்து முதல் பால் எடுத்து சீனி, ஏலப்பொடி சேர்த்து கலக்கி வைக்கவும். சீனியை விருப்பத்திற்கு ஏற்றார்போல் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து, தேங்காய் பாலில் போட்டு ஊற வைத்து சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்