பீட்ரூட் அல்வா 1

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துருவிய பீட்ரூட் - ஒரு கப்
சீனி - ஒன்றரை கப்
மைதா மாவு - அரை கப்
நெய் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 5
தண்ணீர் - அரை கப்


 

துருவிய பீட்ரூட்டை கெட்டியாக அரைக்கவும்.
மைதாவை அரை கப் தண்ணீரில் கரைக்கவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொரிக்கவும்.
அதனுடன் அரைத்த பீட்ரூட், மைதா மாவு கரைசல், சீனி சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறவும்.
கெட்டியாக வந்த பீட்ரூட் அல்வாவை பாத்திரத்தில் எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்