கடல் பாசி - 2

தேதி: June 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

கடல் பாசி - 10 கிராம்
பால் - கால் கப்
சீனி - அரை கப்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
பச்சை கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
பன்னீர் - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

கடல் பாசி செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் 10 கிராம் அளவு கடல் பாசியில் சிறிதளவு கடல் பாசியை போட்டு 10 நிமிடம் நன்கு கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
கரைந்ததும் ஒரு சிறிய தட்டில் வடிகட்டி ஊற்றவும். பிறகு 10 நிமிடம் ஃப்ரிஜ்ஜில் வைத்து உறைய விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி மீதம் இருக்கும் கடல் பாசியை போட்டு மிதமான தீயில் வைத்து கரைய விடவும்.
கரைந்ததும் சீனி, கால் தேக்கரண்டி உப்பு, கலர் பவுடர் மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும். சீனி கரையும் வரை கரண்டியால் 10 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.
10 நிமிடம் கழித்து இறக்கி ஒரு தட்டில் வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும். வெள்ளை கடல் பாசி உறைந்ததும் ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பிறகு நறுக்கிய கடல் பாசியை பச்சை நிற கடல் பாசியில் மேலே தூவி ஃப்ரிஜில் 10 நிமிடம் வைக்கவும். 10 நிமிடம் கழித்து வேண்டிய வடிவில் வில்லைகளாக போட்டுக் கொள்ளவும்.
இஸ்லாமிய இல்லங்களில் விசேஷ நாட்களில் செய்யப்படும் பலகாரம். இது உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியானது. இந்த குறிப்பினை நமக்கு செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

can u tell me whats the english name for "kadal paasi"..

Very Good Site

வணக்கம்,

"கடல் பாசி" -- ஆங்கிலதில் என்ன பெயர் என்று சொல்ல முடியுமா?

நன்றி

Very Good Site

china grass

Thanks Swetha.

Very Good Site

dhanam
agar agar

dhanam

பாபு அண்ணா நான் பிரபாதாமு. எனக்கு கடல் பாசி எப்படி இருக்கும் (எதை செல்லுகிரிர்கள்) என படம் காட்ட முடியுமா please....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

முதல் படத்தில் வெள்ளையாக நூல் போன்று இருக்கின்றதே.. அதுதான் கடல்பாசி.

இந்த லிங்கில் இருக்கின்றது பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/forum/no/2020

இன்னும் பெரிய படம் வேண்டுமென்றால் கூகிள் இமேஜில் agar agar என்று டைப் செய்து தேடிப்பாருங்கள்.

நன்றி அண்ணா. நான் கட்டாயம் செய்து பார்த்து செல்கிரேன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*