கார சட்னி

தேதி: June 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

 

தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 2
கல் உப்பு - முக்கால் தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் கடுகை போட்டு வெடிக்க விடவும். பிறகு கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பு சற்று லேசாக சிவந்ததும் பெருங்காயத் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு 30 நொடி பொன்னிறமாக வதக்கவும்.
கடலைப் பருப்பு பொன்னிறம் ஆனதும் வெங்காயம், மிளகாய் வற்றல், புளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மிளகாய் வற்றல் சிவக்க வேண்டும்.
அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்தில் நைசாக அரைக்கவும்.
மிக எளிதில் செய்ய கூடிய கார சட்னி தயார். இதை இட்லி, ரவா தோசை மற்றும் வெள்ளை அப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். வெளியூர் பயணம் செல்லும் பொழுது எடுத்துச் செல்லலாம். சீக்கிரத்தில் கெடாமல் இருக்கும்.
இந்தக் குறிப்பினை வழங்கி, நமக்கு செய்து காட்டியவர் திருமதி. சாந்தி விஸ்வநாதன் அவர்கள். இவர் செட்டிநாடு உணவுகள் தயாரிப்பில் நல்ல அனுபவம் உள்ளவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹலோ சாந்தி மேடம் என் பெயர் முத்து மாரி நீங்கள் செய்து காட்டிய காரசட்னி ரெசிபி யில் கொத்துமல்லி இலை அல்லது புதினா இலை சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்குமா?

இந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது. செய்து காண்பித்த திருமதி.சாந்தி அவர்களுக்கு மிகவும் நன்றி.

திரு சாந்தி விஸ்வநாதன் உங்கள் குறிப்பை முயர்சித்தேன் கால் கிலோ தக்காளியில் பண்ணினேன் ரொம்ப அருமை தேங்ஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு