திருமதி மனோஹரி அவர்களுக்கு,

உங்களுடைய எல்லா பதில்களையும் படித்துப் பார்ப்பேன்..அவ்வளவு அழகாக அருமையாக எழுதுவீர்கள்...எப்படியாவது இதை கேட்டுவிடவேண்டும் என்று நினைத்தேன்.நீங்கள் எழுத்துடன் தொடர்புடைய ஏதாவது பணியில் இருந்தீர்களா???இல்லை என்றால் தாராளமாக அப்பணியில் இறங்கலாம்..அதற்குறிய எல்லா திறமையும் உங்களுக்கு உண்டு.உங்களைபற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது....எப்படியோ கஷ்டப்பட்டு தமிழில் ட்ய்ப் செய்து விட்டேன்...இனி உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஹலோ டியர் தலிகா, எப்படி இருக்கின்றீர்கள்? என்னுடைய எழுத்தைப் பற்றி புகழ்ந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி. அதற்காக ஒரு இதழையே தொடங்கியுள்ளதைப் பார்க்கும் பொழுது என்னுடைய கருத்துக்களை போலவே எனது எழுத்தைக் கூட விரும்ப, அறுசுவையில் அன்பு உள்ளங்கள் இருக்கின்றீர்கள் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆவலுக்கு நன்றி. கூறுவதற்கு நிறைய இருக்கின்றது. ஆனால் பிரமாதமாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை. தாங்கள் கேட்டுள்ளதுப் போல் நான் எந்த எழுத்துப் பணியிலும் இல்லை. உண்மையிலேயே எனக்கு எழுதுவது என்றால் பிடிக்காது. டைரி எழுதும் பழக்கம் கூட கிடையாது. ஆனால் அறுசுவை என்ற இணைய தளத்தில் கடந்த ஒரு வருடங்களாக சந்தோசமாக கதைவிட்டுக் கொண்டிருக்கின்றேன் அவ்வளவு தான். அதை தவிர தமிழில் ஒன்றுமே எழுதுவது கிடையாது. ஓ... சாரீங்க மளிகை லிஸ்டை தமிழில் தான் எழுதுவேன். இதைத் தவிர ஒன்னும் தமிழில் எழுதுவது கிடையாது.

மற்றபடி நான் ஒரு சராசரியான குடும்பத்தலைவி, அன்பு என்றால் என்ன விலை என்று கேட்கும் கணவரை அளவுக்கதிகமாக நேசிக்கும் அன்பான மனைவி.மூன்று குழந்தைகளுக்கு தாய் என்று பெருமையாக கூறிக் கொள்வதிலே காலம் ஓடிக்கொண்டிருக்கின்றது. பொதுவாக நான் ஒரு அரட்டை பேர்வழி. பள்ளியில் படிக்கும் பொழுதுக் கூட எனது வகுப்பு ஆசிரியர் என்னையும், எனது சக தோழிகளையும் பார்த்து அடிக்கடி நாங்கள் உறுப்படவே மாட்டோம் என்று அடிக்கடி கடிந்துக் கொள்வார்கள். காரணம் வகுப்பில் பாடத்தை கவனிக்க மாட்டோம். எதையாவது சீரியஸ்ஸாக பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்போம்.

இதனால் அடிக்கடி எங்களை பெஞ்சு மேல் நிற்க வைத்து விட்டு தான் மேற்கொண்டு பாடம் நடத்துவார். அப்படி பெஞ்சு மீது நிற்க்கும் பொழுது கூட சிரிப்பை அடக்கமுடியாது, இதனால் வகுப்பின் அமைதி குலைந்து விடுவதால் வகுப்பின் முன்பாக முழங்கால் போடப்படுவோம். அப்பொழுதும் உரைக்காது. கடைசியில் வகுப்பிலிருந்து வெளியே நிற்க வைத்து பிறகு தான் சுரனையே வரும்.ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொள்வோம்.ஆனால் வகுப்பரைக்குள் போக அனுமதி தந்தவுடன் மீண்டும் அதே அரட்டை தொடங்கி விடும்.

ஒரு முறை ஆசிரியர் மிகவும் கடுப்பாகி நான் வகுப்பில் சிரிக்க மாட்டேன் என்று போர்ட்டு முழுவதும் எழுத வைத்து விட்டார்கள். அப்பொழுதும் எங்களுக்கு புத்திவரவில்லை. வீட்டில் பாட புத்தகத்தில் எனது தோழியின் கதை புத்தகமான ராணி முத்துவை மறைத்து வைத்து படித்து, அம்மாவிடம் செம அடி வாங்கி இருக்கின்றேன்.ஆனால் அதற்காக அம்மா எனது ஆர்வத்தை குறைக்காமல் எனக்கு பிடித்த குடும்ப பத்திரிக்கையான ராணி என்ற வார பத்திரிக்கையை வாரா வாரம் வீட்டில் போடும் படி ஏற்பாடு செய்தார்கள்.இதனால் வாங்கிய அடி அனைத்தும் மறந்து போனது. இதை எழுதும் போது தான் நினைவுக்கு வருகின்றது.

எங்கள் வீட்டில் எனக்கு தெரிவிக்காமலே (நான் படிக்கின்ற காரணத்தினால்) என்னைப் பெண்பார்க்க ஏற்ப்பாடு செய்திருந்தார்கள். இது தெரியாமல் நான் எனது சகோதரர்களுடன் செய்த கலாட்டாவில் என் கணவர் பயந்துப் போய் எனது அத்தையிடம் கொஞ்சம் கூட அடக்கமே இல்லாத அந்த பெண்ணைப் பார்க்கவா அழைத்து சென்றீர்கள் என்று கடிந்துக் கொண்டாராம், பிறகு தான் பெண் பார்க்க போயிருக்கும் விசயமே எனக்கு அதாவது பெண்ணிற்கு தெரியாது என்று தெரிந்து பிறகு, பெண்ணை சரியாக பார்க்கவில்லை என்று என் கணவர் கூறியதால் மீண்டும் ஒரு முறை பெண்பார்க்க வந்தார்கள் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

என்னுடைய இந்த விளையாட்டு புத்தி இன்னும் மாறவில்லை என்று நினைக்கின்றேன். எந்த நேரமும் சிரித்து பேசி மகிழ்வது எனது இயல்பாகி விட்டது. மிகவும் வெளிப்படையாக பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் சோகம் வருவது இயல்பு, ஆனால் சோகமே வாழ்க்கையாய் மாறிப்போன காலகட்டங்களை எல்லாம் பல முறை தாண்டி வந்துள்ளேன். இனிமேல் வந்தாலும் அதையும் தாண்டுவேன் என்று நம்புகின்றேன்.

திரைப்படங்களை விட, திரைப்பட பாடல்கள் மிகவும் பிடிக்கும். சோகப் படங்களையோ, சோகப் பாடல்களையோ கொஞ்சம் கூட விரும்புவதில்லை. அதைப் போல் தொலைக் காட்சியில் Talk show பார்ப்பது பிடிக்கும். காரணம் அதில் வருகின்றவர்கள் அரசியலிலோ, பொழுதுப் போக்கு அம்சங்களிலோ,தொழில் ரீதியாகவோ அல்லது விளையாட்டுத் துறையிலோ பல சாதனை புரிந்தவர்கள் வருவார்கள். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றார்கள் என்பதை ரசிப்பேன். நமக்கு வாழ்க்கைக்கு தேவையான பல விசயங்களை அவர்களின் மூலமாக கற்றுக் கொள்ளமுடியும் என்று நம்புவதால் விரும்பி பார்ப்பேன்.

இதைத் தவிர வெளிஉலகம் என்று பார்தேனானால், கனடாவில் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் இருக்கின்றது அவ்வளவு தான். அதில் கஸ்டமர் சாய்ஸ் அவார்ட் இரண்டு முறை கிடைத்துள்ளது. மேலும் சாதரணமாக வருடந்தோரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வில் கூட, வேலையின் மீது எனக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக ஒரிரு முறை எனக்கென்று தனிப்பட்ட முறையில் ஊதிய உயர்வு வழங்கியுளார்கள். பொதுவாகவே எதைச் செய்தாலும் ஈடுபாட்டுடன் செய்வேன். நானும் என்னைச் சுற்றிலும் எப்பொழுதும் ஒரு சந்தோசமான ஒரு சூழ்நிலையைத் தக்க வைத்துக் கொள்வேன். சக ஊழியர்களின் பிறந்த நாள், போன்ற விசயங்களில் வாளன்டியராக எல்லா ஏற்பாடுகளையும் செய்து மகிழ்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பல நேரங்களில் அவர்களின் முக வாட்டத்தை வைத்து பேசி அவர்களின் பிரச்சனையை போக்குவதில் உதவுவேன். நான் பேசிய அந்த நபர் அடுத்த நாளைக்கு வரும் போது இயல்பாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொறு விசயத்தையும் அனுபவிப்பதால், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றேன்.

இவ்வாறு சுவரசியமில்லாத விசயங்களே நிறைய இருப்பதால்,மேலும் எழுதி உங்களை சலிப்படைய வைக்காமல் இருபதற்காக இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். அது மட்டுமல்லாமல் அறுசுவைநேயர்களிடமும் என்னைப் பற்றிப் மனம்விட்டு பேச ஒரு சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மனமார எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி நன்றி.

என்ன நீங்க? சுவாரசியமில்லாத விஷயங்கள்-னு சொல்லி நிறைய சுவாரசியமான விஷயங்களை சொல்லி இருக்கீங்க...
இதுபோல எங்களுடன் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதால் எங்களுக்கு தான் ரொம்ப உபயோகமாக உள்ளது...
மேலும் உங்கள் அனுபவங்களை நிறைய எதிர்பார்கிறோம்...
நன்றி, மேடம்...

நன்றி...

Hi Manohari
தமிழ் நன்றாக எழுதுகீறீர்கள்.

வாணி அவர்கள் சொன்னது போல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ......பிறகு இன்னும் நிறைய எழுதுகிறேன்...இப்பொழுது என்னுடைய மகள் எதையெதையோ எறிந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்....இன்னும் சிறிது நேரம் போனால் வீட்டையே தலைகீழாக மாற்றி விடுவாள்....by the way i am juz introducing myself here....i am a 23 yrs old woman blessed with 16 months old baby girl and a honest n loving husband ....i am doing fineee n leading peacuful n happy life...n right now in india ..will go back to UAE soon.i juz started cooking after i got married .but i lovvv cookingn experimenting new dishes ..i dunt have much to say abt my life..i juz started learning how to live..so faar i am happy n i wish to b happy always..take care ..byeee

ஹலோ டியர் வாணி, எங்கே என்னுடை அனுபவங்கள் சுவாரசியமில்லாமல் இருக்குமோ என்ற சந்தேகத்தில் தான் அவ்வாறு எழுதியிருந்தேன். ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் உங்கள் பதிலிருந்து நான் நினைத்தது தவறு என்று புரிந்துக் கொண்டேன். நிச்சயமாக மேலும் மற்றொரு சந்தர்ப்பத்தில் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

நன்றி டியர் தலிகா. தங்களை பற்றியும் எங்களுடன் அறிமுகப்படுத்தி கொண்டதற்க்கு மிக்க மகிழ்ச்சி. தங்களின் அழகான குடும்பத்தில் இப்பொழுது போலவே எப்பொழுதும்,அமைதியும் மகிழ்ச்சியும் மென் மேலும் பெருகி என்றென்றும் ஆனந்தமாக வாழ வாழ்த்துகின்றேன். நன்றி.

hello manohari madam.
i am highly in a depressed position;
i did my higher studies with good results but after i got married my total carrier is nill.i have a baby boy .i am more worried abt my future
i would like to hear positive words from u
thanks

hello bhuvana i am also another example .I studied medicine and parctisedin India after coming to sydney i passed all exams and could not finish my practical exams because of baby boy.and the higher authorities say valididty is gone i have to start from beginning. so i become zero.everyday i am crying istudied corres accouinting and all with distinction here but5 not earning penny. ic ry a lot everyday.if u getany advice i will be the first to read.i am sure manohari will respond.take care

hello gaju
Atleast we have a baby just for the kid we should make ourself happy i think.god will show some solution for us.i am waiting for manohari madams reply.

ஹலோ புவனேஸ்வரி எப்படி இருக்கின்றீர்கள் மனக்கவலை என்பது எல்லோருக்குமே பொதுவானது என்ற காரணத்தினால் என்னால் தங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.உங்களுடைய பதிவிலிருந்து நீங்கள் உங்கள் வருங்காலத்தை கண்டு வீணாக கவலைப் படுகின்றீர்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.எதுவாக இருந்தாலும்,

கல்யாணம் என்பது அனைவருக்கும் வாழ்க்கையில் நடக்கும் ஒரு வைபோகம் அவ்வளவு தான். அது எந்த விதத்திலும் ஒருவரின் வாழ்க்கையைப் பாதிக்காது என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.திருமண வாழ்க்கையால் தான் நமது எதிர் காலம் வீணாகி விட்டது, அல்லது நமது வளர்ச்சிக்கு தடையாகி விட்டது போன்ற எண்ணங்கள் நம்முடைய பலவீனத்தை தான் காட்டும். அவையெல்லாம் கையாளாகாதவர்கள் கூறும் நொண்டி சாக்கு போல கருதலாம்.ஆகவே இவ்வாறான சிந்தனைகளுக்கே இடமளிக்கக் கூடாது என்று தான் கூறுவேன்.

யாராலும், எவற்றாலும் அழிக்கமுடியாத செல்வம் கல்விச் செல்வம். அப்பேற்ப் பட்ட செல்வத்தையே அடையப் பெற்றுள்ளீர்கள். அதைப் போலவே எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்க முடியாத செல்வம் மக்கட்செல்வம், அதையும் அடையப் பெற்ற மகா பாக்கியசாலி அல்லவா நீங்கள், அதற்காகவே அந்த ஆண்டவனுக்கு அனுதினமும் நன்றி சொல்லி, இந்த இரண்டு செல்வங்களின் உதவியுடன் நீங்கள் எதையும் சாதிக்க முடியும் என்று நம்ப வேண்டும்.

முதலில் உங்களுக்கு வாழ்க்கையில் என்னத் தேவை என்று முடிவெடுங்கள்.ஒன்று இல்லற வாழ்க்கை மட்டுமே போதும் என்பது, இதில் கிடைத்த வாழ்க்கைக்கு ஏற்றமாதிரி நம்மை மாற்றிக் கொள்வது. மற்றொன்று தன்னுடைய உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து முன்னேர நினைப்பது.

இவ்வாறு வாழ்க்கைகளில் நிலவும் இரண்டு முறைகளுமே நல்ல முடிவைத்தான் தரும், ஆனால் அது அவரவரின் மனநிலையையும் வாழ்க்கையின் சூழ்நிலையைப் பொருத்து முடிவெடுப்பது நல்லது. இரண்டையும் போட்டு குழப்பினால் பிறகு பிரச்சனையில் தான் முடியும். ஆகவே எதையுமே தெளிவாக ஆனால் உறுதியாக முடிவெடுப்பது நன்மையிலேயே முடியும்.
இதில் நீங்கள் உங்கள் கணவரைக் கூட கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் உங்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களின் முடிவுகளாக இருக்க வேண்டும்.

ஆகவே கவலைப் படுவதை விட்டு விட்டு, அதற்கு பதிலாக உங்களின் எதிர் கால கணவுகளை நினைவாக்குவதற்கு உள்ள தடைகளை ஆராய்ந்துப் பார்த்து அதைத் தாண்ட என்ன வழி இருக்கின்றது என்று கண்டறியுங்கள்.காரணம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே அவர்களுக்கு தடையாய் அமைந்த தடைக் கற்களையும் கூட படி கற்களாக வைத்து தான் முன்னேறி சென்று சாதித்தார்கள் என்பதை எல்லோருமே அறிவோம்.

ஆகவே நீங்கள் ஒட்டு மொத்தமாக depressed position ல் இருக்கின்றீர்கள் என்று கருதாமல் எதற்கு கவலைப் படுகின்றீர்கள், உங்களை அதிகம் வாட்டும் பிரச்சனை என்ன என்று கண்டறிந்து அதை மட்டும் கலைவ்தில் கவனத்தை செலுத்துங்கள்.

பிறகு நீங்கள் நினைத்ததை சாதிக்க பல வழிகள் தானாகவே திறக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்.வாழ்க்கை மிகவும் இனிமையானது,இன்றைக்கு அதை தவற விட்டால் நாளைக்கு திரும்ப வராது. ஆகவே கவலைகளை மறந்து அதன் இனிமையை உணர்ந்து பாருங்கள், அப்பொழுது கட்டாயம் கூறுவீர்கள் நான் கூறுவது முற்றிலும் உண்மை என்று.

என்னைப் பொருத்தவரையில் அவசியமேற்ப்பட்டாலொழிய, படித்த பெண்கள் அனைவருமே கட்டாயம் வேலைக்கு போக வேண்டும் என்றோ, அதனால் தான் நம்முடைய வாழ்க்கை தரம் உயரும் என்று நினைப்பதும், அதனால் கூட தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுக் கூட தவறு என்பது என் கருத்து என்று கூறி முடிக்கின்றேன். இவ்வாறு இந்த விசயத்தை பற்றி எனது ஆலோசனையை கேட்ட உங்களுக்கு மனமார எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன், நன்றி.

மேலும் சில பதிவுகள்