கேரமெல் பாயசம்

தேதி: July 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 4 கப்
சீனி - முக்கால் கப்
முந்திரி - 10
நெய் - கால் கப்
பச்சரிசி - ஒரு மேசைக்கரண்டி


 

முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் ஒரு மேசைக்கரண்டி சீனியை போட்டு தீயை மிதமாக வைத்து ஒரு கரண்டியால் 3 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். சீனி நிறம் மாறும் வரை கிளறவும்.
சீனி கரைந்து ப்ரவுன் கலர் ஆனதும் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.
முன்பே ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி ஆற வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கருக்கிய சீனியில் 4 கப் பாலை ஊற்றவும்.
பால் லேசாக கொதித்ததும் அதில் களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு குக்கரை மூடி வெய்ட் போட்டு 4 விசில் விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் முந்திரியை போட்டு 2 நிமிடம் வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
4 விசில் வந்ததும் குக்கரை திறந்து சீனியை சேர்த்து நன்கு கலக்கவும். சீனி கரைந்ததும் பிறகு வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு சூடாக பரிமாறவும்.
இப்பொழுது சுவையான கெரமெல் பாயசம் தயார். இந்த குறிப்பை நமக்கு வழங்கியவர் திருமதி. பத்மபிரியா ராம்குமார் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திருமதி பத்மப்ரியா..மிகவும் அருமை இந்த பாயாசம்.அரிசிக்கு பதில் ரவையை கடைசியில் சேர்த்து செய்தேன் மிகவும் அருமை.நன்றி அட்மின்