டால்

தேதி: July 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

துவரம் பருப்பு - அரை கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 15 பல்
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெய்ட் போட்டு 3 விசில் விட்டு குழைய வேக விடவும். 3 விசில் வந்ததும் மூடியை திறந்து வெந்த பருப்பை நன்கு கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். சீரகம் பொரிந்ததும் அதில் நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
2 நிமிடம் கழித்து வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு கீறிய பச்சை மிளகாயை அதில் போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் மிக்ஸியில் அல்லது அம்மியில் வைத்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
இஞ்சி, பூண்டு வாசனை போனதும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு கலக்கி விடவும்.
பருப்புடன் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஒன்றாக கலந்ததும் மூடி போட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.
3 நிமிடம் கழித்து மூடியை திறந்து கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி மேலே தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுவையான டால் தயார். இந்த டால் சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இதை மிகவும் விரைவில் செய்து விடலாம். இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளவர் திருமதி. ஸ்ரீதேவி விஜயசேகரன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டால் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. மிகவும் அருமையாக செய்து காட்டியமைக்கு நன்றி.

god is my sheperd

come out very well. Thanks

very very tasty and your dol