www.arusuvai.com
நியுட்ரிஷியஸ் ரசம்
இந்த ரசத்தில் எல்லா வகை பருப்புகளின் சத்துகளும் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மிகவும் ருசியானதும் கூட.
தேவையானப் பொருட்கள்
- தேவையான பொருட்கள்:
- துவரம்பருப்பு- 1தே.கரண்டி,
- பாசிப்பயறு- 1 தே.கரண்டி,
- கொண்டைக்கடலை- 1தே.கரண்டி,
- கொள்ளுப்பருப்பு- 1தே.கரண்டி,
- தட்டைப்பயறு- 1தே.கரண்டி,
- புளி- சிறிய எலுமிச்சம்பழ அளவு,
- மிளகு- 1 தே.கரண்டி,
- சீரகம்- 1/2 தே.கரண்டி,
- மல்லி- 1தே.கரண்டி,
- வர. மிளகாய்- 2,
- பூண்டு- 4 பல்,
- மஞ்சள் பொடி- 1/2 தே.கரண்டி,
- கடுகு- 1 தே.கரண்டி,
- உ. பருப்பு- 1/2 தே.கரண்டி
- பெருங்காயம்- 1/2 தே.கரண்டி,
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு.
செய்முறை
- செய்முறை:
- துவரம்பருப்பை தவிர மற்ற பருப்புகளை 5 மணி நேரம் ஊறவிடவும்.
- குக்கரில் துவரம்பருப்பு, ஊற வைத்த பருப்பு வகைகளை சேர்த்து 4 கப் தண்ணீர், மஞ்சள்பொடி பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.
- 5 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும்
- குக்கர் ஆறியதும் குக்கரை திறந்து பருப்பை நன்றாக கடையவும்.
- புளியை 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து தக்காளியையும் கரைத்து விடவும்.
- மிளகு, சீரகம், மல்லி, வர. மிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- கடுகு உ. பருப்பு தாளிக்கவும்.
- புளி, தக்காளி கரைசலை ஊற்றவும்.
- உப்பு சேர்க்கவும்.
- 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- அரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்க்கவும்.
- 4 நிமிடம் கொதித்ததும் கடைந்து வைத்துள்ள பருப்புத்தண்ணீரை சேர்க்கவும்.
- 2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து இறக்கவும்.
-
-