இத்தாலியன் பாஸ்தா

தேதி: July 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

Bow tie வடிவத்திலான பாஸ்தா - மூன்று கோப்பை
பெரிய தக்காளி - நான்கு
டின் தக்காளி சாஸ்/puree - அரைக்கோப்பை
எண்ணெயில் ஊறிய தக்காளி வற்றல் - கால் கோப்பை
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு பற்கள்
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சில்லி ஃபிளேக்ஸ் - கால் தேக்கரண்டி
பேசில் தழை - பத்து எண்ணிக்கைகள்
துருவிய பார்மசான் சீஸ் - கால் கோப்பை
ஆலீவ் ஆயில் - கால் கோப்பை


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைக்கவும்.
தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுத்து, அதன் தோலை உரித்து மசித்து கூழாக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். பின்னர் அதில் நறுக்கின வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும்.
அதனைத் தொடர்ந்து தக்காளி வற்றலைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு கூழாக்கிய தக்காளியை ஊற்றவும்.
அதைத்தொடர்ந்து தக்காளி சாஸை ஊற்றி நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.
இதற்கிடையில் மற்றொரு அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் பாஸ்தாவைப் போட்டு பொதியிலுள்ள விதிமுறைகளின் படி வேகவைக்கவும்.
தக்காளி கலவை நன்கு கொதித்து கெட்டியாக ஆனவுடன் உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் கால் கோப்பை தண்ணீரைச் சேர்த்து கலக்கி, அடுப்பின் அனலை சிம்மில் வைக்கவும்.
பின்பு சிம்மில் உள்ள தக்காளி சாஸில், பொடியாக நறுக்கிய பேஸில் இலையைத்தூவி கலக்கி விட்டு, வெந்துக்கொண்டிருக்கும் பாஸ்தாவை ஜல்லடைக் கரண்டியால் அரித்தெடுத்து உடனே சாஸில் கொட்டி கலக்கவும்.
இவ்வாறு சாஸில் கலக்கிய சுவையான பாஸ்த்தாவை பரிமாறும் தட்டுகளில் போட்டு சீஸைத் தூவி சூடாக பரிமாறவும்.
அறுசுவையில் முந்நூறுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள <a href="experts/232" target="_blank"> திருமதி. மனோகரி ராஜேந்திரன் </a> அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் மனோ மேடம்,
தக்காளி வற்றல் என்றால் என்ன?

lakshmi sri sundar

lakshmi sri sundar