சேப்பங்கிழங்கு வறுவல்

தேதி: July 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு-8
இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம்-1
மிளகாய்த்தூள்-11/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
தேங்காய்த்துருவல்- 3 மேசைக்கரண்டி
தனியா-1 ஸ்பூன்
தேவையான உப்பும் எண்ணெயும்


 

வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
தேங்காயை தனியா, மிளகாய்த்தூளுடன் கொரகொரப்பாக தண்ணீர் சேர்க்காது அரைத்துக்கொள்ளவும்.
சேப்பங்கிழங்குளை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
வெங்காயத்தைச் சேர்த்து முறுகும்வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
வெந்த கிழங்குகளை துண்டங்கள் செய்து எண்ணெயில் பொன் முறுவலாக வறுத்து எடுக்கவும்.
கிழங்கு ஆறியதும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,உப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து சிறிது எண்ணெயில் 5 நிமிடம் கிளறி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்