அவசர வற்றல் குழம்பு

தேதி: July 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி-எலுமிச்சம்பழ அளவு
சாம்பார்ப் பொடி- ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கடுகு- அரை ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு- 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்-5
கறிவேப்பிலை- சில இலைகள்
தேவையான உப்பு


 

புளியை 2 கப் நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகைப்போடவும்.
அது வெடித்ததும் வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து குறைந்த தீயில் அவை லேசாக சிவக்கும் வரை வதக்கவும்.
புளி நீரையும் சாம்பார்ப்பொடியையும் தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஓரளவு கெட்டியானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சூப்பர் நன்றாக இருந்தது, அவசரத்துக்கு ரொம்ப நன்றாக இருந்தது.

மனோ மேடம் நானும்,உங்க அவசர வற்ற குழம்பு வைத்தேன்,சிம்பிளா நல்லா இருந்தது.நன்றி மேடம்.

மனோ ஆன்டி ,
நேற்று மதியம் செய்தேன். இந்த குழம்புடன் சேனைகிழங்கி ரோஸ்ட்(உருளைகிழங்கு ரோஸ்டாக மாறியது..எங்களுக்கு சேனைகிழங்கு இங்கு கிடைக்காது..) மற்றும் பீட்ருட் பொரியலுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது.
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்