வேலைக்கு செல்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் - 4689 | அறுசுவை மன்றம் - பக்கம் 3
forum image
வேலைக்கு செல்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்

இது ரொம்ப நாள் சந்தேகம்..இங்கேயே நிறைய பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருத்தப்படுவதாக சொல்கின்றார்கள்...என்னை பொருத்தவரை வேலைக்கு செல்வது என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது..சரி எல்லாரும் சொல்கிறார்களே என்று வேலைக்குப் போன அனுபவமும் உண்டு..வேலைக்குப்போய் வீடு திரும்பினால் வீட்டிலுள்ள வேலைகள்..எல்லாம் முடிந்து மாத இறுதியில்
யோசித்து பார்த்தால் மாத சம்பளம்..அதைத்தவிர வேறு எதையும் நான் சம்பாதித்ததாக எனக்கு தோன்றவில்லை..ஆனால் சுகமான குடும்ப வாழ்கையில் சுவாரசியமே தொலைந்து போன மாதிரி தோன்றியது..என் கணவருடன் பேசக்கூட நேரத்தை எண்ணி எண்ணி ஒதுக்க கஷ்டபடவேண்டும்...எனக்கு இந்த குளிர்சாதனபெட்டியில் உணவினை வைத்து சாப்பிடுவதே பிடிக்காது...அதிலும் எனது கணவருக்கு அதனை கொடுப்பது அறவே பிடிக்காது...ஆனால் அதையெல்லாம் செய்யாமல் வேலைக்கு செல்வது நடக்காத காரியம் ..இதனால் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.இதெல்லாம் என் குழந்தை பிறப்பதற்க்கு முன்னால்...இப்பொழுது என்னால் குழந்தையை daycare il விட்டுவிட்டு செல்வதென்றால்..என்னால் யோசித்துப்பார்க்கவே முடியாவில்லை..இருவரும் சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற விஷயம் வேறு..ஆனால் அதல்லாமல் வேலைக்கு போக ஆசைப்படுபவர்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்???அது நிஜ ஆசைதானா இல்லை வேறு எதேனும் காரணங்கள் உண்டா??இல்லை நான் தான் இப்படியா???


மின்னஞ்சல்

பாபு அனைவருக்கும் அண்ணா எனக்குத்தம்பியாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்களது மின்னஞ்சல்கள் கிடைத்தன. கூட்டாஞ்சோறுக்கான குறிப்புகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. நேரமில்லாததால் உடனே அனுப்ப முடியவில்லை.
நன்றி

பெரிய வார்த்தைகள்

மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தைகள். நீங்கள் வருந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் தெரிவிக்கவில்லை. அதேபோல் தனிப்பட்ட யாரையும் மனதில் வைத்துக்கொண்டும் இதனை நான் சொல்லவில்லை. அறுசுவை தமிழ் இணையதளத்தில் ஆங்கிலத்தில் உரையாடல்கள் நடப்பது சற்று பொருத்தமாக இல்லை. தமிழ் அறிந்த அனைவரும் ஆங்கிலம் அறிந்தவர்கள் அல்ல. தவிர்க்க இயலாத காரணங்களால் ஆங்கிலத்தில் டைப் செய்பவர்களை நான் குறை சொல்வது கிடையாது. வேறு வழியில்லை எனும்பட்சத்தில் ஆங்கிலத்தில் டைப் செய்யலாம். வழி இருக்கையில் அதை முயற்சித்து பாருங்கள் என்பதுதான் எனது வேண்டுகோள். உண்மையிலேயே இது எனது வேண்டுகோள்தான். கட்டளை அல்ல.

ஜெயந்தி அக்கா அவர்களுக்கு,

நிச்சயம் நான் உங்களுக்கு தம்பிதான். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது குறிப்புகளை வெளியிடுங்கள். மின்னஞ்சல்கள் வந்ததா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளவே அதனைக் கேட்டேன். (ஏனென்றால் பலமுறை நடந்த, நடக்கின்ற விசயம் இது. தவிர்க்க இயலாத காரணங்களால் கொஞ்சம் தாமதம் ஆனாலும், எனக்கு, அறுசுவைக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் கண்டிப்பாக நான் பதில் கொடுத்துவிடுவேன். அது பல நேரங்களில் bulk mail folder சென்று விடுவதால், நான் பதில் கொடுக்கவில்லை என்று எண்ணி பலர் வருத்தத்தில் இருப்பர். )

முட்டை இல்லாத ஆம்லெட்

திரு பாபு அவர்களுக்கு,

முட்டை இல்லாது ஆம்லெட் செய்வீர்களாமே, அதெப்படி என்று எனக்கு சொல்வீர்களா?

வாழ்த்துக்கள்,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!

வாழ்த்துக்கள்,
கார்த்திக்
வாழ்க்கை வாழ்வதற்கே ;) !!!
(நான் உபயோகிப்பது close-up அல்ல) :)

அன்புள்ள மணிபாரதி

வாங்க வாங்க... அது எப்படி உங்க பதிவு பாதில நின்னு போச்சு, நான் பெரீய்ய்ய்ய கதை எல்லாம் ஒரே பதிவா அடிச்சுருக்கேனே! :-/ வழக்கம் போல பாபு அண்ணா ( நான் பாபு மாமானு கூப்பிடலாம்னு நினைக்கிறேன், நீங்கள்லாம் என்ன சொல்றீங்க?) தெளிவு படுத்துவார் :-) இருந்தாலும் விடாம அடிச்சுருக்கீங்க, அதுக்கு இந்தாங்க பூங்கொத்து!

எல்லா சந்தேகத்தையும் உங்க மகன் கிட்ட கேட்காம, இங்க கேட்டு தெரிஞ்சுட்டு, என்னிக்காவது மகன் அதெல்லாம் உனக்கு தெரியாதும்மானு சொன்னார்னா, காமிங்க உங்க திறமையை! :-) அசந்துடுவார் ;-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அன்புள்ள ஜெயந்தி

வணக்கம் பெரியக்கா. ஒரு கொடுமை சொல்றேன் கேளுங்க- என் அப்பா வேலைக்கு சேர்ந்தே 26 வருஷம் தான் ஆகுது, நீங்க 32 வருஷம் சர்வீஸ். ஆனா நீங்க எனக்கு அக்கா, ஹிஹி என்ன கொடும சரவணன் இது :-) சும்மா வெளாட்டுக்கு சொன்னேன், கோச்சுக்காதீங்க. அப்படி கோபம் இருந்தா தலைல நங்குனு ஒரு குட்டு குட்டிடுங்க.. :-)

நீங்க போறது அரசு/வங்கி உத்தியோகமா? அதுல ஒரு வசதி என்னனா நல்ல டைமிங்ஸ். காலை 9-5/6 தான் வேலைன்னு இருக்கும். இங்க என்னடானா(இந்தியாவிலயும் தான்) பயங்கர எர்ராடிக் டைமிங்ல வேலை செய்யறாங்க. இப்படி இருந்தா எப்படி குடும்பம் & குழந்தை கவனிப்பு இருக்கும்னு பயமா இருக்கு :-( ஒழுங்கா நேரம் ஒதுக்கி அதுல திறம்வ்பட வேலை செஞ்சா போதும்னு நான் சொல்றதுக்கு, இப்போ எல்லாம் பேசுவ, நுழைஞ்ச அப்புறம் தெரியும் நிலைமைனு என் கணவர் சொல்றார். சாஃப்ட்வேர் துறையை ஒத்த மாதிரி வேலை செய்யறவங்க எப்படி சமாளிக்கலாம்??

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

முட்டையில்லா ஆம்லெட்

வாங்க கார்த்திக், நம்ம பாலிஸிய வைச்சிருக்கிற ஆட்களைப் பார்த்தாலே நமக்கு சந்தோசம் தாங்காது. (LIC, Bajaj allianz அ சொல்லல சார். 'வாழ்க்கை வாழ்வதற்கே'வை சொல்றேன்.) முட்டை இல்லாத ஆம்லெட் பத்தி கேட்கிறீங்களா? அட அது வேற ஒண்ணுமில்லங்க. வெஜிடபிள் ஆம்லெட்தான். இங்க போய் பாருங்க.. முட்டை இல்லாத ஆம்லெட் கிட்டத்திட்ட ஒரு வருஷமா அறுசுவை மெம்மபரா இருக்கிற நீங்க, முதல் முறையா விருந்தினர் பதிவேட்டில் கருத்து சொல்லியிருக்கீங்க. ரொம்ப நன்றி.

பாதியில் கட்

சகோதரி மணிபாரதி அவர்களுக்கு,

உங்கள் பிரச்சனைக்கான காரணம் சரியாக தெரியவில்லை. தீர்வு கண்டுபிடிக்க இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அதற்கு மேல் டைப் செய்ய இடம் இல்லை என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. இடம் பற்றாக்குறை எப்படி, எங்கு, எதனால் ஏற்பட்டது என்பதை யூகிக்க முடியவில்லை. வழக்கம்போல் தங்கள் மகனிடமே இதையும் கற்றுக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்வதுதான் பெருமையான விசயம். யாரிடம் இருந்து என்பது முக்கியம் அல்ல.

அப்புறம் ஹேமா, என்னை பாபு மாமான்னு கூப்பிடப்போறீங்களா? இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? நீங்க டேய் பாபுன்னு கூட கூப்பிடுங்க. வருத்தப்படமாட்டேன். ஆனா, இந்த மாமா போஸ்டிங் மட்டும் வேண்டாம்.

dear manibharadhi

ungalukku ondru----internet cut aagi poyirukkalaam

irandu----answer pakkathil alavaaga type seidhirupeergal..enter enter enter koduthukkonde type seidhaal evvelavu vendumaanaalum ore pakkathil type seyyalaam...adhu dhaan nadandhadhu endru ninaikiren

இடம் தீர்ந்துவிட்டது

சகோதரி அவர்கள் இடம் தீர்ந்துவிட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். அதுதான் குழப்பமாக இருந்தது. பதில் கொடுக்கும்போது இண்டெர்நெட் கனெக்சன் கட் ஆனால் இடம் பற்றாக்குறையோ, டைப் பண்ணுவதில் பிரச்சனையோ வராது. கட் ஆனதே தெரியாது. நீங்கள் Submit செய்யும்போதுதான் கனெக்சன் கட் ஆனதை தெரிந்துகொள்ள முடியும்.

அதேபோல், நீளமாக டைப் செய்வதாலும் இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. Enter key ஐ அழுத்தாமல் தொடர்ச்சியாக எவ்வளவு பெரிய பாரா வேண்டுமானாலும் டைப் செய்யலாம். அதிலும் பிரச்சனை இல்லை.

இதே பிரச்சனை தங்களுக்கு தொடர்ந்து இருந்தால் தெரியப்படுத்துங்கள். ஒருமுறை தான் அப்படி நடந்தது என்றால் கவலைக்கொள்ள தேவையில்லை.

ஏமாற்றம்

ஆஸ்வினி எண்ணைக்கு பெண்கள் விஷயம் தானே என்றில்லாமல் தன் அனுபவத்தை அருசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டது போல், முட்டை இல்லா ஆம்லெட்டும் அட்மின் அவர்களின் குறிப்பா!? என்று பார்த்தால் சிறிய ஏமாற்றம்.
இருந்தாலும் முட்டை இல்லா ஆம்லெட்டை தெரிந்து கொண்டேன் அதற்கு (மனோ மேடத்திற்கும்) மிகவும் நன்றி.

இந்திரா

indira