toddler

i have 2 kids (boys) (3 1/2 years old) & 7 month I have a problem (enathu muthal makan ore kulappadi panran thambiyarai adiththal , killuthal . nan muthal sonnudan time spent pannirathu kooda aanal avarai eppadi mathuvathu. eppadi solvali ketka pannuvathu. he is very active. can you help us please

2 சின்னக் குழந்தைகளை வைத்துக் கொண்டு சமாளிப்பது ரொம்பக் கஷ்டம் தான். இருந்தாலும் நீங்கள் உங்கள் முதல் குழந்தையிடம் இவனை உனக்காகத்தான், உன்னோடு விளையாடுவதற்காகத்தான் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லுங்கள். இவன் பெரியவனாகி உன்னோடு விளையாடுவான், உன்னுடைய தம்பி என்று அடிக்கடி சொல்லுங்கள். பார் உன்னுடைய தம்பி எவ்வளவு அழகாக உன்னை மாதிரியே இருக்கிறான், உன்னை மாதிரியே சிரிக்கிறான் என்றெல்லாம் சொல்லுங்கள். கண்டிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக
மாறுவான். நம்பிக்கையுடன், பொறுமையுடன் இருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி

நன்றி

எனக்கும் இரண்டு பையன்கள் . பெரிய பையன் சின்னவன் பிறந்த 4 நாட்களிலிருந்து அடிக்க , கிள்ள ஆரம்பித்துவிட்டான் . ஜெயந்திக்கா சொன்னமாதிரி நாங்களும் சொல்லி பார்த்தோம் . கொஞ்சநாள் செய்யவில்லை. பிறகு ஆரம்பித்துவிட்டான் . பிறகு நண்பர்கள் , உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது 'தம்பியை இவங்ககிட்ட கொடுத்துவிட்டு போவோமா? ' என்று கேட்போம் . 'வேண்டாம் " என்பான். வீட்டில் வந்து தம்பியை அடித்தால் உறவினர் பெயரை சொல்லி அவர்களிடம் தம்பியை கொடுத்துடுவேன் என்று மிரட்டுவேன். உடனே அவனால் நிறுத்தமுடியவில்லை. கொஞ்ச கொஞ்சமாக மாறிவிட்டான். இப்ப சின்னவன் பெரியவனை அடிக்கிறான்.

மேலும் சில பதிவுகள்