Anyone is Using Ashwini Hair Oil

Hi,

Am using Ashwini Hair Oil for last two months, the rate of hair fall seems to be less comparatiely before. But, I have a doubt since it has a scented smell in Ashwini Hair oil will it cause any side effects to hair in Future.I wish to have some views about Ashwini Hair Oil from users.Thanks.

Rgds,
Yuvarani

No it wont cause any side effect, Ashwini Hair Oil is really good for hair..... so gohead

Thx for your immediate reply. I like to which hair oil is best Ashwini Hair Oil or Keokarpin Hair Oil or Navarathna Hair Oil out of thie three which is good for preventing hair fall & helps for hair growth. Kindly let me know.

Out of my choice Ashwini is best , Navarathana is only of head message iam often using Ashwini hair oil my hair is long no falling ...
Thanks
Malinisuresh

இது பொம்பளங்க சமாச்சாரம்னு இல்லாம நானும் கொஞ்சம் கலந்துக்கலாங்களா?

கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் மாதிரி இப்ப நானும் கொஞ்ச நாளா அஸ்வினி தாங்க யூஸ் பண்ணுறேன். (உண்மையிலேயே நிறைய பேர் கண்ணு கெடாம தப்பிக்கும்னு நம்புறேன். சூரிய ஒளி பட்டுச்சுன்னா அப்படி ஒரு ரிப்ளெக்ஷன். சாலிக்கிராமம் ஆவுச்சி ஸ்கூல் வாசல்ல நின்னா, சூட்டிங்க்கு சன்லைட் ரிப்ளெக்டர் கிடைக்கலே, கொஞ்ச நேரம் வரமுடியுமான்னு கேக்குறாங்க..)

அஸ்வினி பரவாயில்லைன்னுதான் தோணுது. தலையில எத்தனை முடி இருக்குன்னு எண்ணி வைக்காததுனால, குறைஞ்சிருக்கா, கூடியிருக்கான்னு எல்லாம் கண்டிபிடிக்க முடியல. நான் வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிக்கிறேன்னா,

முன்னெல்லாம் தலை சீவிட்டு சீப்பை பார்த்தா, சீப்புக்கு முடி முளைச்சிருக்கும். இப்ப இல்ல.

நான் மட்டுமே யூஸ் பண்ற பாத்ரூம் அவுட்லெட் பைப் முழுக்க முடி தேங்கி, தண்ணிக்கு ரெட் சிக்னல் காமிச்சு நிறுத்தி வச்சிருக்கும். அது இப்ப குறைஞ்சிருக்கு.

தலைக்கு எண்ணெய் (எப்பவாவது) தேய்க்கும்போது, கையோட நாலு அஞ்சு முடியாவது வரும். அதுவும் இப்ப இல்ல.

இந்த எண்ணெய்யில ஏதோ கொஞ்சம் விசேஷம் இருக்கிற மாதிரிதாங்க தெரியுது. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடியே யூஸ் பண்ண ஆரம்பிச்சிருந்தா இன்னும் கொஞ்சம் காப்பாத்தி இருக்கலாமோன்னு இப்ப தோணுது. ஆனா, நான் சொன்ன எபெக்ட் எல்லாம், ஊருல எங்க வீட்ல, நல்ல தண்ணியில குளிக்கிறப்பதான்.

இங்க சிங்காரச் சென்னையில, மேடவாக்கம் (சுண்ணாம்பு) தண்ணியில குளிச்சுப் பாருங்க.. அஸ்வினி இல்ல.. பெவிக்கால் தடவி குளிச்சாக்கூட கொட்டுற முடியை நிறுத்த முடியாது. ஊருக்கு போற ஒவ்வொரு வாரமும் "என்ன முடி வெட்டினியா" ன்னு ஒருத்தராவது கேள்வி கேட்காம இருக்க மாட்டாங்க.

இருந்தாலும் என் வோட்டை மனப்பூர்வமா அஸ்வினிக்கு போடுறேன்.

பாபு மாமா போய் பாபு தாத்தா ஆகிடுவீங்க போலிருக்கே! (இப்படி சொல்லிட்டு, ஸ்மைலி போடாம போயிட முடியுமா???) :-)))

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

பாபு அண்ணா நலமா? தங்களின் அனுபவ பூர்வமான பதிலுக்கு மிக்க நன்றி. நான் பத்தாவது படிக்கும் போது என் முடியை பார்த்து கண்ணு போடாதவர்கள் யாரும் இல்லை . இது என்ன தலையில் முடியா இல்லை கரு நாகா பாம்பா என்பார்கள்.என் தலை முடியை எப்போதும் அம்மா தான் பின்னுவார்கள் குறைந்தது அரை மணி நேரம் ஆகும். பள்ளி படிப்பு முடிந்து காலேஜ் சேர்ந்த பின் காலேஜ் ஸ்டைலுக்காக தலையில் எண்ணெய் வைக்காமல் முடியை பறக்க விட்டு செல்லுவேன் அம்மா ஏதாவது சொன்னால் உங்களுக்கு என்ன தெரியும் இது தான் ஸ்டைல் என்பேன். மூன்று வருடங்கள் பண்ண லூட்டி இன்று என் முடி எலியின் வால் போல தலையில் தொங்குகிறது. புகுந்த வீட்டில் அனைவருக்கும் நீண்ட கூந்தல் என்னை எல்லாரும் சேர்ந்து கிண்டல் செய்கிறார்கள் .கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன் ;இருந்தாலும் ஒரு நப்பாசை தான் அதற்கு தான் நல்ல என்ணெய்யை தேடுகிறேன்.

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. இனி தொடர்ந்து அஸ்வினி என்ணெய் உபயோகிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்